கரண், பூரான் அதிரடி: கெயில், ராகுல் சரிவிலிருந்து மீண்ட கிங்ஸ் லெவன் பஞ்சாப்

டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
கரண், பூரான் அதிரடி: கெயில், ராகுல் சரிவிலிருந்து மீண்ட கிங்ஸ் லெவன் பஞ்சாப்

2019-ஆம் ஆண்டு 12-ஆவது சீசன் ஐபிஎல் போட்டித் தொடரின் 52-ஆவது லீக் ஆட்டம் மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் சங்க ஐஎஸ் பிந்த்ரா கிரிக்கெட் மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.

இதில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து களமிறங்கிய கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 183 ரன்கள் எடுத்தது. அதிரடியாக ஆடிய சாம் கரண் 24 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 55* ரன்கள் விளாசினார். 

நிகோலஸ் பூரான் 48, மயங்க் அகர்வால் 36, மன்தீப் சிங் 25 ரன்கள் எடுத்தனர். கிங்ஸ் லெவன் பஞ்சாப் தரப்பில் சந்தீப் வாரியர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com