வாக்குப்பதிவு நேரத்தை மாற்றக் கோரும் மனு: தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்

வாக்குப்பதிவு நேரத்தை மாற்றியமைக்கக் கோரும் மனு மீது தேர்தல் ஆணையம் விரைவில் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வாக்குப்பதிவு நேரத்தை மாற்றக் கோரும் மனு: தேர்தல் ஆணையம் முடிவு எடுக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்


வாக்குப்பதிவு நேரத்தை மாற்றியமைக்கக் கோரும் மனு மீது தேர்தல் ஆணையம் விரைவில் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மக்களவையில் உள்ள 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாகத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் 4 கட்டத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ள நிலையில், மேலும் 3 கட்டத் தேர்தல்கள் எஞ்சியுள்ளன. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் முகமது நிஜாமுதீன் பாஷா, ஆஸாத் ஹயாத் ஆகியோர் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், நாடு முழுவதும் அனல் காற்று கடுமையாக வீசுகிறது; இதேபோல் விரைவில் முஸ்லிம்களின் புனித ரமலான் மாத நோன்பு அனுசரிக்கப்பட இருக்கிறது. இதைக் கருத்தில் கொண்டு, எஞ்சிய 3 கட்டத் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவு நேரத்தை 2 முதல் 2.50 மணி நேரம் நீட்டிக்க வேண்டும். இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் கடந்த திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது. ஆனால் அதன்மீது தேர்தல் ஆணையம் எந்த முடிவையும் எடுக்கவில்லை. அதனால் எஞ்சிய 3 கட்டத் தேர்தல்களுக்கான வாக்குப்பதிவை அதிகாலையில் 4.30 அல்லது 5 மணிக்குத் தொடங்கி நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்த மனு, உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதிகள் தீபக் குப்தா, சஞ்சீவ் கன்னா ஆகியோரைக் கண்ட அமர்வு முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுவின் முக்கியத்துவத்தை கருதி, உடனடியாக அதை விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வழக்குரைஞரை நோக்கி, மனு குறித்து தேர்தல் ஆணையம் விரைந்து முடிவு எடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com