சுடச்சுட

  

  மேற்கு வங்கத்தை நள்ளிரவில் தாக்கிய ஃபானி புயல்: இன்று மாலை வங்கதேசத்தை அடையும் (விடியோ)

  By ENS  |   Published on : 04th May 2019 12:17 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  FANIS-RAG


  கொல்கத்தா: இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் இரண்டு நாட்களாக சின்னாபின்னமாக்கி வரும் ஃபானி புயல் நேற்று நள்ளிரவில் மேற்கு வங்கத்தை தாக்கியது.

  நேற்று காலை ஒடிஸாவில் மிகப் பயங்கர காற்றுடன் கரையைக் கடந்த ஃபானி புயல் அப்படியே தீவிரப் புயலாக வலுவிழந்து நள்ளிரவு 12.30 மணியளவில் மேற்கு வங்கத்தை சூறையாடத் தொடங்கியது.

   

  கன மழையுடன், சூறாவளிக் காற்றும் மேற்கு வங்க மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களைக் கடந்து சென்றது. அப்போது மணிக்கு 70 - 80 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. 

  எனினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்ததால் உயிர்சேதம் ஏதும் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை.

  மேலும் இது வடக்கு வடகிழக்காக நகர்ந்து இன்று மதியத்துக்கு மேல் வங்கதேசத்தை அடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பெய்யும் கனமழை காரணமாக ஃபானி புயல் வலுவிழக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

  கராக்பூரில் 95 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. ஃபானி புயல் கடக்கும் பாதையில் இன்று அதிகாலை முதலே கன மழை பெய்து வருகிறது. இன்று மாலைக்குப் பிறகு நிலைமை சற்று சீரடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னெச்சரிக்கை காரணமாக பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai