பிரதமர் குறித்த புகார்கள்: தேர்தல் ஆணைய முடிவுகளுக்கு  ஓர் ஆணையர் எதிர்ப்பு தெரிவித்தார்

தேர்தல் நடத்தை விதிமீறல் புகார்களிலிருந்து பிரதமர் நரேந்திர மோடியை விடுவிக்கும் தேர்தல் ஆணையத்தின் முடிவுகளுக்கு, இரு ஆணையர்களில் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரதமர் குறித்த புகார்கள்: தேர்தல் ஆணைய முடிவுகளுக்கு  ஓர் ஆணையர் எதிர்ப்பு தெரிவித்தார்

தேர்தல் நடத்தை விதிமீறல் புகார்களிலிருந்து பிரதமர் நரேந்திர மோடியை விடுவிக்கும் தேர்தல் ஆணையத்தின் முடிவுகளுக்கு, இரு ஆணையர்களில் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:
மகாராஷ்டிர மாநிலம், வார்தாவில் கடந்த மாதம் 1-ஆம் தேதி பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை பெரும்பான்மை ஹிந்துக்கள் புறக்கணித்துவிட்டதால் சிறுபான்மையினரை அதிகமாகக் கொண்ட கேரளத்தின் வயநாடு மக்களவைத் தொகுதியில் அவர் போட்டியிடுவதாக விமர்சித்திருந்தார்.
இது, மத உணர்வுகளைத் தூண்டிவிட்டு தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளக் கூடாது என்ற தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவதாக தேர்தல் ஆணையத்திடம் புகார் கூறப்பட்டது.
மேலும், அதே மாநிலத்தின் லாட்டூர் மாவட்டத்தில் கடந்த மாதம் 9-ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின்போது, முதல் முறையாக வாக்களிக்கும் இளைஞர்கள் தங்கள் வாக்குகளை பாலாகோட் விமானத் தாக்குதலுக்கு அர்ப்பணிக்கும்படி மோடி கேட்டுக் கொண்டார்.
இதுவும், ராணுவ நடவடிக்கைகளை தேர்தல் பிரசாரத்துக்குப் பயன்படுத்தக் கூடாது என்ற ஆணையத்தின் உத்தரவை மீறுவதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
இந்த இரு புகார்களையும் பரிசீலித்த தேர்தல் ஆணையம், வார்தாவிலும், லாட்டூரிலும் பிரதமர் நரேந்திர மோடியின் பேச்சுக்கள் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறவில்லை என்று ஒருமனதாக முடிவெடுத்ததாகத் தெரிவித்தது.
எனினும், தலைமை தேர்தல் அதிகாரி சுனில் அரோரா, தேர்தல் ஆணையர்கள் அசோக் லவாசா மற்றும் சுஷீல் சந்திரா ஆகியோர் அடங்கிய குழுவில், தேர்தல் நடத்தை விதிமீறல் புகாரிலிருந்து பிரதமரை விடுக்கும் முடிவுக்கு 2 பேர் மட்டுமே ஆதரவு தெரிவித்தனர். அவர்களில் ஒரு தேர்தல் ஆணையர் அந்த முடிவை எதிர்த்தார்.
எனவே, 2-க்கு 1 என்ற விகிதத்திலேயே அந்த முடிவுகள் எடுக்கப்பட்டன என்று தகவலறந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் ஆணையச் சட்டப்படி, முடிவுகளை எடுப்பதில் தலைமை தேர்தல் அதிகாரிக்கும், இரு தேர்தல் ஆணையர்களுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டால், மூவரில் பெரும்பான்மையானோர் ஆதரவு தெரிவிக்கும் கருத்தே இறுதி முடிவாக ஏற்றுக்கொள்ளப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com