மோடி மீதான மேலும் 2 புகார்கள்: நெறிமீறல் இல்லை என தேர்தல் ஆணையம் அறிவிப்பு

பிரதமர் நரேந்திர மோடி மீது காங்கிரஸ் அளித்த மேலும் 2 புகார்களில் தேர்தல் நடத்தை நெறிமீறல் இல்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மோடி மீதான மேலும் 2 புகார்கள்: நெறிமீறல் இல்லை என தேர்தல் ஆணையம் அறிவிப்பு


பிரதமர் நரேந்திர மோடி மீது காங்கிரஸ் அளித்த மேலும் 2 புகார்களில் தேர்தல் நடத்தை நெறிமீறல் இல்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இத்துடன் மோடிக்கு எதிரான 5 தேர்தல் விதிமீறல் புகார்களை தேர்தல் ஆணையம் விசாரித்து தள்ளுபடி செய்துள்ளது. இந்த 5 புகார்களிலும் அவர் நெறிமுறைகளை மீறவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், நாந்தேட் நகரில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் மோடி பேசுகையில், காங்கிரஸ் ஒரு மூழ்கும் டைட்டானிக் கப்பலாக உள்ளது. அந்தக் கப்பலில் இருந்தவர்கள் (தேசியவாத காங்கிரஸ்) வெளியேறிவிட்டனர்; அல்லது தப்பிச் சென்றுவிட்டனர் என்று கூறியிருந்தார்.
மேலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எளிதில் வெற்றிபெறும் தொகுதியை நுண்ணோக்கி மூலம் தேடிக்கொண்டிருக்கிறார் என்றும் மோடி கூறியிருந்தார்.
இதேபோல், வாராணசி தொகுதியில் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு கடந்த ஏப்ரல் 25-ஆம் தேதி வந்தபோது நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் மோடி பேசுகையில், பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு புதிய இந்தியா தக்க பதிலடி கொடுத்துள்ளது என்று கூறியிருந்தார்.
இந்த பேச்சுகளிலும் தேர்தல் நடத்தை நெறிமுறைகளை மோடி மீறிவிட்டதாக, தேர்தல் ஆணையத்தில் காங்கிரஸ் சார்பில் புகாரளிக்கப்பட்டது. அந்தப் புகார்களை ஆய்வு செய்த தேர்தல் ஆணையம், மோடி நெறிமுறைகளை மீறவில்லை என்று தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com