விவசாயிகள் பிரச்னை: குஜராத் அதிகாரிகளுடன் பெப்சிகோ பிரதிநிதிகள் சந்திப்பு

விவசாயிகள் பிரச்னையில் ஒருமித்த தீர்வு காண்பதற்காக, குஜராத் அதிகாரிகளை பெப்சிகோ இந்தியா நிறுவன பிரதிநிதிகள் வெள்ளிக்கிழமை சந்தித்து பேசினர்.


விவசாயிகள் பிரச்னையில் ஒருமித்த தீர்வு காண்பதற்காக, குஜராத் அதிகாரிகளை பெப்சிகோ இந்தியா நிறுவன பிரதிநிதிகள் வெள்ளிக்கிழமை சந்தித்து பேசினர்.
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த உருளைக்கிழங்கு விவசாயிகளுக்கு எதிரான வழக்கைத் திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாக பெப்சிகோ இந்தியா நிறுவனம் தெரிவித்திருந்தது.
குஜராத் மாநிலம், காந்திநகரில் தலைமைச் செயலர் ஜே.என்.சிங், வேளாண் துறை கூடுதல் தலைமைச் செயலர் சஞ்சய் பிரசாத் ஆகியோரை பெப்சிகோ இந்தியா நிறுவனத்தின் பிரதிநிதிகள் வெள்ளிக்கிழமை சந்தித்தினர்.
இதற்கு பிறகு சஞ்சய் பிரசாத் கூறியதாவது: குஜராத்தைச் சேர்ந்த 9 விவசாயிகளுக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கை திரும்பப் பெற்றுக் கொள்வதாக பெப்சிகோ இந்தியா பிரதிநிதிகள் கூறினர். 
அவர்கள் சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் உரிய ஆவணங்களை சமர்ப்பிப்பார்கள் என்று சஞ்சய் பிரசாத் தெரிவித்தார்.
பெப்சிகோ அதிகாரி கூறுகையில், சந்திப்பு சிறப்பாக நடந்து முடிந்தது. இந்த விவகாரத்துக்கு தீர்வு காணப்படும் என்றார்.
அமெரிக்காவைச் சேர்ந்த பெப்சிகோ, பல ஆண்டுகளாக இந்தியாவிலும் பல்வேறு திண்பண்டங்களையும், குளிர்பானங்களையும் விற்பனை செய்து வருகிறது.
அந்த நிறுவனத்தின் லேஸ் சிப்ஸ் தயாரிப்புக்காக பிரத்யேக உருளைக்கிழங்கு விதைக்கு உரிமம் பெற்று வைத்துள்ளது.
அந்த வகை விதையை விதைத்து உற்பத்தியில் ஈடுபட்டதாக குஜராத்தைச் சேர்ந்த 11 விவசாயிகளுக்கு எதிராக பெப்சிகோ இந்தியா நிறுவனம் வழக்கு தாக்கல் செய்தது. 
இதற்கு விவசாயிகள் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், விவசாயிகளுக்கு எதிரான வழக்கை திரும்பப் பெற முடிவு செய்துள்ளதாக பெப்சிகோ இந்தியா நிறுவனம் அறிவித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com