ராபர்ட் வதேரா பெயரை விட எனது பெயரையே பிரியங்கா அதிகம் உச்சரித்து வருகிறார்: ஸ்மிருதி இராணி

ராகுலின் கரங்களில் அப்பாவியின் ரத்தக்கறை படிந்துள்ளதாக பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இராணி திங்கள்கிழமை குற்றம்சாட்டினார்.
ராபர்ட் வதேரா பெயரை விட எனது பெயரையே பிரியங்கா அதிகம் உச்சரித்து வருகிறார்: ஸ்மிருதி இராணி

ராகுலின் கரங்களில் அப்பாவியின் ரத்தக்கறை படிந்துள்ளதாக பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இராணி திங்கள்கிழமை குற்றம்சாட்டினார்.

நாடு முழுவதும் உள்ள 51 மக்களவைத் தொகுதிகளுக்கான 5-ஆம் கட்ட வாக்குப்பதிவு திங்கள்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் காங்கிரஸ் கட்சியின் பாரம்பரியமான அமேதி மற்றும் ரேபரேலி ஆகிய தொகுதிகளும் அடங்கும். இதில் அமேதி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுலை எதிர்த்து மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி போட்டியிடுகிறார்.

இந்நிலையில், ராகுலின் கரங்களில் அப்பாவியின் ரத்தக்கறை படிந்துள்ளதாக பாஜக வேட்பாளர் ஸ்மிருதி இராணி குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:

அமேதியில் செயல்பட்டு வரும் சஞ்சய் காந்தி மருத்துவமனையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் மற்றும் அவரது சகோதரி பிரியங்கா வதேரா ஆகியோர் அறங்காவலர்களாக உள்ளனர். அங்கு ஞாயிற்றுக்கிழமை அனுமதிக்கப்பட்ட ஒரு அப்பாவிக்கு மருத்துவம் மறுக்கப்பட்டு அவர் உயிரிழந்தார். ஏனென்றால் அவரிடம் பிரதமரின் ஆயுஷ்மான் மருத்துவக் காப்பீடு அட்டை இருந்தது தான் காரணம். அதனாலேயே அவருக்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனை நிர்வாகம் மறுத்துவிட்டது. 

நேரு குடும்பத்தினருக்கு அப்பாவி ஏழைகளின் வாழ்வாதாரத்தை விட தங்களின் அரசியல் ஆசை தான் பிரதானமானது. உண்மையிலேயே ராகுலுக்கு ஏழைகளின் வளர்ச்சி தான் முக்கியம் என்றால், இவ்விவகாரத்தில் எதற்காக மௌனம் சாதிக்க வேண்டும். ராகுலின் கரங்கள் அதுபோன்ற அப்பாவி ஏழைகளின் ரத்தக்கறையால் நிறைந்துள்ளது தற்போது தெரிந்துவிட்டது.

கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு வரை எனது பெயர் கூட தெரியாத பிரியங்கா வதேரா, இன்று எனது பெயரை மட்டுமே தொடர்ந்து உச்சரித்து வருகிறார். அதிலும் அவரது கணவர் ராபர்ட் வதேரா பெயரை விட எனது பெயரை தான் பிரியங்கா தொடர்ந்து உச்சரித்து வருகிறார். இதில் எனக்கு மகிழ்ச்சி தான். என்னுடைய வளர்ச்சி எத்தனை பெரியது என்பதை இந்த சம்பவம் நிரூபித்துள்ளது என்று தெரிவித்தார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com