டிடிஹெச் நிறுவனங்களை தணிக்கை செய்ய "பிஇசிஐஎல்' க்கு அதிகாரம்: டிராய்

புதிய ஒழுங்காற்று விதிமுறைகளுக்கு இணக்கமாக கேபிள்டிவி, டிடிஹெச் நிறுவனங்கள் செயல்படுகிறதா என்பது குறித்து தணிக்கை செய்ய பொதுத் துறையைச் சேர்ந்த

புதிய ஒழுங்காற்று விதிமுறைகளுக்கு இணக்கமாக கேபிள்டிவி, டிடிஹெச் நிறுவனங்கள் செயல்படுகிறதா என்பது குறித்து தணிக்கை செய்ய பொதுத் துறையைச் சேர்ந்த பிராட்காஸ்ட் என்ஜினியரிங் கன்சல்டன்ட் இந்தியா நிறுவனத்துக்கு (பிஇசிஐஎல்) அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது.
 இதுகுறித்து டிராய் செயலர் எஸ்.கே.குப்தா பிடிஐ செய்தியாளரிடம் தெரிவித்ததாவது:
 புதிய ஒழுங்காற்று கட்டமைப்பு விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பது குறித்து டிராய் சார்பில் பிஇசிஐஎல் அமைப்பு தணிக்கை பணிகளை மேற்கொள்ளும்.
 எனவே, விநியோக தளத்தில் உள்ள ஆபரேட்டர்கள் அனைவரும் புதிய ஒழுங்காற்று விதிமுறைகளுக்கு இணக்கமாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
 டிடிஹெச் மற்றும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் "ரேண்டம்' முறையில் தேர்வு செய்யப்பட்டு இந்த தணிக்கை பணி மேற்கொள்ளப்படும். மிக விரைவில் இந்த நடவடிக்கைகள் தொடங்கும் என்றார் அவர்.
 புதிய கட்டண உத்தரவு மற்றும் விதிமுறைகளை மீறி செயல்படும் டிடிஹெச், கேபிள் டிவி ஒலிபரப்பு நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், இது தொடர்பாக விரைவில் தணிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என ஏற்கெனவே டிராய் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com