சுடச்சுட

  

  காங்கிரஸ் தலைவர் ராகுலுடன் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு 'திடீர்' சந்திப்பு

  By ANI  |   Published on : 08th May 2019 11:05 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Chandrababu Naidu met rahul gandhi

   

  ஆந்திர முதல்வரும் - தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் தலைவர் ராகுலை புதுதில்லியில் உள்ள அவரது இல்லத்தில் புதன்கிழமை காலை சந்தித்துப் பேசினார்.

  கடந்த சில நாட்களாக பிற மாநில கட்சித் தலைவர்களுடன் தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் சந்தித்து வருவது மத்திய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மேலும் மத்தியில் பாஜக, காங்கிரஸ் அல்லாத மாநில கட்சிகள் இணைந்த 3-ஆவது அணி ஆட்சியை ஏற்படுத்த அவர் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

  மேலும், மதசார்ப்பற்ற ஜனதா தளம் கட்சித் தலைவரும், கர்நாடக முதல்வருமான குமாரசாமியுடனான சந்திப்பின் போது காங்கிரஸ் கூட்டணியில் இணைவது தொடர்பாகவும் சந்திரசேகர ராவ் ஆலோசித்ததாகக் கூறப்படுகிறது.

  இதனிடையே, சந்திரசகேர ராவ் உடனான சந்திப்பை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நிராகரித்துவிட்டார். தேர்தல் பரப்புரை பணிகளில் மும்முரமாக இருப்பதால் சந்திக்க நேரமில்லை என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டாலும், மத்தியில் காங்கிரஸ் கூட்டணியில் தொடரவே திமுக விரும்புவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் உடனான சந்திரபாபு நாயுடுவின் இந்த சந்திப்பு மத்திய கூட்டணியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai