சுடச்சுட

  

  மகாராஷ்டிராவிற்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.2160 கோடி ஒதுக்கீடு

  By DIN  |   Published on : 08th May 2019 09:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  drought_relief


  மகாராஷ்டிரா மாநிலத்திற்கு வறட்சி நிவாரண நிதியாக கூடுதலாக ரூ.2160 கோடி ஒதுக்கியுள்ளது மத்திய அரசு. 

  மகாராஷ்டிரா மாநிலத்தில் கடுமையான வறட்சி நிலவுவதாகவும், மாநிலத்தில் 151 தாலுக்கா கடும் வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்த மாநில அரசு, மத்திய அரசு வறட்சி நிவாரண நிதி ஒதுக்குவற்கு தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்த வேண்டும் என அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்ணாவிஸ் தலைமை தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்திருந்தார். 

  இதையடுத்து தேர்தல் ஆணையமும் தேர்தல் நடத்தை விதிகளை தளர்த்தியது. 
  இந்நிலையில், மகாராஷ்டிரா அரசுக்கு வறட்சி நிவாரண நிதியாக ரூ.2160 கோடியை மத்திய அரசு கூடுதலாக ஒதுக்கியுள்ளது. இதுவரை மகாராஷ்டிராவிற்கு மட்டும் ரூ.4248.59 கோடியை வறட்சி நிவாரண நிதியாக அறிவித்துள்ளது மத்திய அரசு. 

  இதனிடையே மாநிலத்திற்கு கூடுதல் வறட்சி நிவாரண நிதி ஒதுக்கியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் பட்னாவிஸ் நன்றி தெரிவித்துள்ளது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai