பாலாகோட்டில் இந்தியா நடத்திய தாக்குதலில் 170 பயங்கரவாதிகள் பலி: இத்தாலிய பெண் பத்திரிகையாளர் தகவல்

பாலாகோட்டில் இந்தியா நடத்திய தாக்குதலில் 170 பயங்கரவாதிகள் பலி: இத்தாலிய பெண் பத்திரிகையாளர் தகவல்

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் இந்திய விமானப் படை நடத்திய தாக்குதலில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதிகள் சுமார் 170 பேர் உயிரிழந்ததாக

புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் இந்திய விமானப் படை நடத்திய தாக்குதலில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதிகள் சுமார் 170 பேர் உயிரிழந்ததாக இத்தாலிய பெண் பத்திரிகையாளர் பிரான்சிஸ்கோ மரினோ தகவல் தெரிவித்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா பகுதியில் கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி பாதுகாப்பு படையினரை குறி வைத்து பயங்கரவாதி ஒருவர் வெடிபொருள் நிரம்பிய வாகனம் மூலம் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.

அதற்கு பதிலடி தரும் வகையில், பாகிஸ்தானின் பாலாகோட் பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் முகாம் மீது கடந்த பிப்ரவரி 26-ஆம் தேதி விமானப் படை மூலமாக இந்தியா தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலால் பாகிஸ்தானுக்கு எவ்வித சேதமும் இல்லை என்று அந்நாட்டு அரசு கூறி வந்தது.
இந்நிலையில், பாலாகோட்டில் நடத்தப்பட்ட தாக்குதலில் 130 முதல் 170 பயங்கரவாதிகள் வரை உயிரிழந்திருக்கலாம் என்று இத்தாலிய பத்திரிகையாளர் பிரான்சிஸ்கோ மரினோ தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இந்தியா டுடே தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பேட்டியில் கூறப்பட்டுள்ளதாவது:

பாலாகோட் பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய விமானப் படை நடத்திய தாக்குதலால் எவ்வித பாதிப்பும், சேதமும் ஏற்படவில்லை என்று பாகிஸ்தான் பொய் கூறி வருகிறது.

அந்த பகுதியில் உள்ள நம்பத்தகுந்த வட்டாரங்களிடம் இருந்து கடந்த சில வாரங்களாக சேகரித்த தகவல்களைக் கொண்டு இதைக் கூறுகிறேன்.
பிப்ரவரி 26-ஆம் தேதி அதிகாலை பாலாகோட்டில் இந்தியா தாக்குதல் நடத்தியது. அவர்கள் தாக்குதல் நடத்திய இரண்டரை மணி நேரத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினர் அந்த பகுதிக்கு வந்தடைந்தனர்.

காயமடைந்தவர்களை சின்கியாரியில் உள்ள முகாமுக்கு கொண்டு சென்றனர். அங்கு ராணுவ மருத்துவர்களைக் கொண்டு காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை
அளிக்கப்பட்டுள்ளது. பயங்கரவாதிகள் மட்டுமன்றி தனிநபர்கள் 45 பேரும் இதில் காயமடைந்தனர். அவர்களில் 20 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இந்த தாக்குதலில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தவர்களோடு சேர்த்து சுமார் 130 முதல் 170 பயங்கரவாதிகள் வரை உயிரிழந்திருக்கலாம். அதுமட்டுமன்றி பயங்கரவாதிகளுக்கு பயிற்சியளிப்பவர்கள் 11 பேரும் உயிரிழந்துள்ளனர். வெடிகுண்டு தயாரிப்பவர்கள் முதல் ஆயுதங்களை கடத்திச் செல்பவர்கள் வரை பலரும் இதில் அடக்கம்.

ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள், உயிரிழந்த பயங்கரவாதிகளின் குடும்பத்தைச் சந்தித்து ஆறுதல் கூறியதுடன், இழப்பீடாக
நிதியுதவியும் வழங்கியுள்ளனர்.

பயங்கரவாத முகாம்கள் உள்ள பகுதி பாகிஸ்தான் ராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளது. உள்ளூர் காவல் துறையினருக்கு கூட அங்கு அனுமதி கிடையாது என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com