6-ம் கட்ட தேர்தலில் காங்கிரஸ், பாஜகவுக்கு ஒரு சீட் கூட கிடைக்காது- அகிலேஷ் யாதவ் பரபரப்பு பேட்டி

6 ஆம் கட்ட மக்களவைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என்றும் பாஜக சாதி அரசியல் செய்து
6-ம் கட்ட தேர்தலில் காங்கிரஸ், பாஜகவுக்கு ஒரு சீட் கூட கிடைக்காது- அகிலேஷ் யாதவ் பரபரப்பு பேட்டி


லக்னோ: 6 ஆம் கட்ட மக்களவைத் தேர்தலில் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என்றும் பாஜக சாதி அரசியல் செய்து வருவதாக அகிலேஷ் யாதவ் குற்றம்சாட்டினார். 

17-வது மக்களவைக்கு கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி முதல் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி, ஒவ்வொரு மாநிலத்துக்கும் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை 5 கட்டங்களாக வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில், நாளை 6 ஆம் கட்ட வாக்குப்பதிவும், 19 ஆம் தேதி 7 ஆம் கட்ட வாக்குப்பதிவும் நடைபெற உள்ளது. 

இந்நிலையில், சமாஜ்வாடி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், பாஜக சாதி அரசியல் செய்து வருவதாக குற்றம் சாட்டியவர், அவர்கள் கட்சிக்கு என்ன வேண்டுமோ, அதை செய்வதற்காக மக்களை ஏமாற்றி கொண்டிருக்கிறார்கள். இவர்களின் ஆட்சி சாதி, மதத்தவர்களிடம் வெறுப்புணர்வை ஏற்படுத்துகிறது. பாஜக ஆட்சி பொய்களையும், வெறுப்புணர்வையும் முன்வைத்தே இயங்குகிறது. 

ரெட் கார்டு: தேர்தல் ஆணையத்தின் மூலம் மற்ற கட்சியினருக்கு ரெட் கார்டு வழங்குவதன் மூலம் பாஜக வெற்றி பெற முயலுகிறது. சமாஜ்வாதி மற்றும் பகுஜன் சமாஜ்வாதி கட்சியினருக்கு ரெட் கார்டு கொடுத்து, அவர்கள் போட்டியில் இருந்து விலக வேண்டும் என தேர்தல் அதிகாரிகளுக்கு மறைமுகமாக உத்தரவிட்டுருப்பதாக குற்றம்சாட்டினார். 

நாளை நடைபெறவிருக்கும் 6 ஆம் கட்ட வாக்குப்பதிவில் பாஜக, காங்கிரஸ் கட்சிகள் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது. 7 ஆம் கட்ட வாக்குப்பதிவில் பாஜக ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெறும் என்று கருத்து தெரிவித்துள்ளார். 

பாஜக, தாங்கள் மட்டும் தான் குற்றமற்றவர்கள் என்றும் மற்றவர்கள் போலியானவர்கள் என்றும் கூறி மக்களை அச்சுறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது என்றார்.  

A Yadav: BJP wants to win through 'Red Card'. Officers have been instructed to issue as much Red Cards as possible to SP. SP-BSP workers are being issued Red Cards. They're being stopped from casting votes.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com