ஆங்கிலேயர்களை வெளியேற்றியதைப் போல மோடியையும் காங்கிரஸ் விரட்டும்: ரண்தீப் சுர்ஜேவாலா

நமது நாட்டை பல ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த ஆங்கிலேயர்களையே நாட்டை விட்டு வெளியேற்றிய கட்சி காங்கிரஸ். அதேபோல மோடியை காங்கிரஸ் கட்சி விரட்டும் என்று காங்கிரஸ் தலைமைச்
ஆங்கிலேயர்களை வெளியேற்றியதைப் போல மோடியையும் காங்கிரஸ் விரட்டும்: ரண்தீப் சுர்ஜேவாலா


நமது நாட்டை பல ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த ஆங்கிலேயர்களையே நாட்டை விட்டு வெளியேற்றிய கட்சி காங்கிரஸ். அதேபோல மோடியை காங்கிரஸ் கட்சி விரட்டும் என்று காங்கிரஸ் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சுர்ஜேவாலா கூறியுள்ளார்.
அமெரிக்காவில் இருந்து வெளியாகும் சர்வதேச வார இதழான டைம், பிரதமர் மோடியின் புகைப்படத்தை அட்டைப் படத்தில் வெளியிட்டு, இந்தியப் பிரிவினையின் தலைவர் என்று மோடி குறித்து கட்டுரையும் வெளியிட்டுள்ளது. இந்தியாவில் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், சர்வதேச பத்திரிகை மோடியை இவ்வாறு விமர்சித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அந்த அட்டைப் படத்தை தனது சுட்டுரை (டுவிட்டர்) பக்கத்தில் பகிர்ந்துள்ள ரண்தீப் சுர்ஜேவாலா, அது தொடர்பாக வெளியிட்டுள்ள பதிவில், பிரித்தாளும் சூழ்ச்சியைக் கடைப்பிடிப்பவர் மோடி என்று வரையறை செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சி முன்பு ஆங்கிலேய ஆட்சியாளர்களை நமது நாட்டை விட்டு வெளியேற்றியது. அதேபோல மோடியையும் காங்கிரஸ் கட்சி விரட்டும் என்று கூறியுள்ளார்.
மோடியின் குற்றச்சாட்டுக்கு ப.சிதம்பரம் கண்டனம்: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி தனது தனிப்பட்ட பயணத்துக்காக கடற்படைக் கப்பலைப் பயன்படுத்தினார் என்ற மோடியின் குற்றச்சாட்டுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கண்டனம் தெரிவித்துள்ளார். 
இது தொடர்பாக அவர் சுட்டுரையில் வெளியிட்டுள்ள பதிவில், உண்மைக்குப் புறம்பாக பிரதமர் மோடி தொடர்ந்து அவதூறான கருத்துகளைக் கூறி வருகிறார். இதன் மூலம் அவரது பொய்கள் தொடர்ந்து வெளிப்பட்டு வருகின்றன. 
ஐஎன்எஸ் விராட் கப்பலை ராஜீவ் காந்தி தனது பயணத்துக்காகப் பயன்படுத்தவில்லை என்பதை முன்னாள் கடற்படை அதிகாரியே தெளிவுபடுத்தியுள்ளார். பிரதமருக்கு இதுபோன்ற பொய்யான தகவல்களை யார் தருகிறார்கள் என்பது தெரியவில்லை. உண்மை என்ன என்பதை ஆராயாமல், மோடி ஏன் தொடர்ந்து அவதூறு பரப்ப வேண்டும் என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com