சிக்கிம் முதல்வருடன் சீனத் தூதர் சந்திப்பு

சீனத் தூதர் லுவோ ஜவோஹூய், சிக்கிம் முதல்வர் பவன்குமார் சாம்லிங்கை காங்டாக்கில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து எல்லைப்பகுதி வர்த்தகம் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தினார்.

சீனத் தூதர் லுவோ ஜவோஹூய், சிக்கிம் முதல்வர் பவன்குமார் சாம்லிங்கை காங்டாக்கில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து எல்லைப்பகுதி வர்த்தகம் தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்தினார்.
 முக்கியமாக, இருநாடுகளிடையே நடைபெற்று வரும் நாதுலா தாழ்வாரப்பகுதியின் வர்த்தகம் உள்ளிட்ட மற்ற பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வணிகம் சார்ந்த விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
 மேலும், இருநாட்டு பிரதிநிதிகளும் நாட்டில் பொதுவாக நிலவி வரும் பிரச்னைகள் குறித்தும், சிக்கிம் மற்றும் திபெத் பிராந்திய தன்னாட்சி (டிஏஆர்) பகுதிகளில் இரு நாட்டினரும் வர்த்தக பரிவர்த்தனை மேற்கொள்வது குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தியதாக, சிக்கிம் மாநில மக்கள் தொடர்பு துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, இருநாட்டினரும் திறமையான தொழில்நுட்பத்தையும், இயந்திர நுட்பத்தையும் பயன்படுத்தி வணிகப்பொருள்களை பரிமாற்றம் செய்து கொள்வது குறித்து, சாம்லிங்கும், ஜவோஹூய்யும் கலந்தாலோசனை செய்தனர்.
 அப்போது, இருதரப்பிலும் வர்த்தகம் மேற்கொள்ளப்படும் நேரத்தையும், வணிக நாள்களின் எண்ணிக்கையையும் அதிகரித்துக் கொள்வது தொடர்பான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. சீன தரப்பில், நாதுலா சுற்றுலா பகுதியை மேம்படுத்தி, அங்கு வர்த்தகத்தை விரிவுபடுத்துவது குறித்தும் ஆலோசனை பகிரப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com