சுடச்சுட

  

  மாவோயிஸ்ட் பயங்கரவாத குண்டுவெடிப்பில் 2 பாதுகாப்புப் படை வீரர்கள் காயம்

  By DIN  |   Published on : 13th May 2019 10:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Naxals_carried_out_two_blasts_near_CRPF_camp_1

   

  ஒடிஸா மாநிலம், கலஹண்டி மாவட்டத்தில் உள்ள சிஆர்பிஎஃப் படைப்பிரிவு முகாம் அருகே இரட்டை குண்டுவெடிப்பு சம்பவம் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்துள்ளது.

  கலஹண்டி மாவட்டம், திரிலோசன்பூரில் உள்ள சிஆர்பிஎஃப் முகாமில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் முதல் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதையடுத்து, அந்த முகாமில் இருந்து சில மீட்டர் தூரத்துக்கு அப்பால் பிஜபூரில் உள்ள அம்பகுடா சௌக் பகுதியின் காவல்நிலையம் அருகில் 2ஆவது குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. 

  மாவோயிஸ்ட் பயங்கரவாதிகள் ஆதிக்கம் செலுத்தும் திரிலோசன்பூரில் நடந்த இந்த தாக்குதலில் 2 பாதுகாப்புப் படை வீரர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. 

  முன்னதாக, மே 1-ஆம் தேதி மஹாராஷ்டிரத்தின் கர்சிரோலி பகுதியில் நடத்தப்பட்ட மவோயிஸ்ட் குண்டுவெடிப்புத் தாக்குதலில் சிக்கி 16 பாதுகாப்புப் படை வீரர்கள் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai