சுடச்சுட

  

  ஃபானி புயல் பாதிப்பு: ஒடிஸாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிப்பு

  By DIN  |   Published on : 13th May 2019 10:45 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  cyclone_fani

   

  ஒடிஸாவில் கடந்த 3-ஆம் தேதி ஃபானி புயல் கரையை கடந்தது. அப்போது மணிக்கு 240 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய காற்றினால் நூற்றுக்கணக்கான வீடுகளின் கூரைகள் தூக்கியெறியப்பட்டன. ஆயிரக்கணக்கான மரங்கள், மின்சாரக் கம்பங்கள் முறிந்து விழுந்தன.

  ஃபானி புயலால், ஒடிஸாவின் 14 மாவட்டங்களில் உள்ள 14,000 கிராமங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. மின்சாரம், குடிநீர் வசதிகள், தொலைத் தொடர்பு சேவை ஆகியவையும் கடுமையாக பாதிக்கப்பட்டது. 

  இந்நிலையில், புயல் பாதிப்பு காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 64-ஆக திங்கள்கிழமை அதிகரித்தது. 1 கோடியே 65 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

  ஃபானி புயல் எங்கள் மாநிலத்தை தான் பாதித்துள்ளது, மனங்களை அல்ல. அனைவரும் தயவு செய்து தங்களால் இயன்ற உதவியை முதல்வர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். பாதிப்புகள் முடிந்த வரை விரைவாக சீர்செய்யப்படும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்.

  வீடுகளை இழந்த அனைவருக்கும் புதிய வீடு கட்டித் தரப்படும். அனைத்து நிவாரணப் பணிகளும் மே 15-ஆம் தேதி தொடங்கி ஒரு வாரத்தில் முடிக்கப்பட்டு ஜூன் 1-ஆம் தேதி முதல் அவை சம்பந்தப்பட்டவர்களிடம் வழங்கப்படும் என்று தெரிவித்தார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai