விடுதலைப் புலிகள் அமைப்புக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை நீட்டிப்பு: மத்திய அரசு உத்தரவு 

இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை, மேலும் 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. 
விடுதலைப் புலிகள் அமைப்புக்கு மேலும் 5 ஆண்டுகள் தடை நீட்டிப்பு: மத்திய அரசு உத்தரவு 


புதுதில்லி: இந்தியாவில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீதான தடை, மேலும் 5 ஆண்டுகளுக்கு மத்திய அரசு நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. 

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி 1991 ஆம் ஆண்டு படுகொலையைத் தொடர்ந்து தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இத்தடை 2 ஆண்டுகள் அல்லது 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீட்டிக்கப்பட்டு வருகின்றன. புலிகள் இயக்குத்துக்கு எதிரான போரில் அந்நாட்டு ராணுவம் வெற்றி பெற்றதை அடுத்து, புலிகள் இயக்கத்தை முற்றிலுமாக அழித்துவிட்டதாக அந்த நாடு கூறிவருகிறது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தை பல நாடுகள் பயங்கரவாத இயக்கத்தின் பட்டியலில் சேர்த்தன. கடந்த 2006-ஆம் ஆண்டு ஐரோப்பிய யூனியனும் பயங்கரவாத இயக்கப் பட்டியலில் இணைத்தது. இதனால் ஐரோப்பிய நாடுகள் அந்த இயக்கங்களுக்கு தடை விதித்தன.

இதை எதிர்த்து ஐரோப்பிய ஒன்றிய தலைமை நீதிமன்றத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த 2017 ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.

அதில் 2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு விடுதலைப் புலிகள் அமைப்பின் பெயரில் எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறவில்லை என்பதால் அந்த அமைப்பிற்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் விதிக்கப்பட்ட தடையை நீக்குவதாக தீர்ப்பளித்தது. எனினும் இந்தியாவில் புலிகள் இயக்கம் மீதான தடை நீக்கப்படவில்லை.

இந்நிலையில், தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகள் அதாவது 2024 ஆம் ஆண்டு வரை நீட்டித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 

இதுகுறித்து உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் விடுதலை புலிகளுக்கான ஆதரவு அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் விடுதலை புலிகள் ஆதரவாளர்கள் இந்தியாவில் இருப்பதாகவும் குறிப்பாக தமிழகத்தில் அதிகம் இருப்பதாவும், தடை செய்யப்பட்ட அந்த இயக்கத்துக்கு ஆதரவை பெருக்க முயற்சிகள் நடக்கின்றன. விடுதலைப் புலிகள் ஆதரவு இயக்கங்கள் தனி ஈழம் அமைப்பதற்கான முயற்சியை தொடர்ந்து முன்னெடுக்கின்றன. இந்திய இறையாண்மைக்கு எதிராகவும் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையிலும் அவர்கள் செயல்படலாம் என்ற யூகத்தின் அடிப்படையில் வரும் 2024-ஆம் ஆண்டு வரை ஊபா சட்டத்தின் கீழ் விடுதலை புலிகள் இயக்கத்தின் தடை நீட்டிக்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், எந்தெந்த அமைப்புகள் விடுதலை புலிகளுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றன என்கிற தகவல் தெரிவிக்கவில்லை. 

Government of India has issued a fresh notification extending ban on Liberation Tigers of Tamil Eelam (LTTE) as it continues to 'adopt a strong anti-India posture & also continues to pose a grave threat to the security of Indian nationals'

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com