ஈரான் வெளியுறவு அமைச்சர் இந்தியா வருகை

ஈரான் வெளியுறவு அமைச்சர் ஜாவத் ஷரீப்  இருநாள் பயணமாக திங்கள்கிழமை இரவு இந்தியாவுக்கு வந்தார். வெளியுறவு அமைச்ச
ஈரான் வெளியுறவு அமைச்சர் இந்தியா வருகை


ஈரான் வெளியுறவு அமைச்சர் ஜாவத் ஷரீப்  இருநாள் பயணமாக திங்கள்கிழமை இரவு இந்தியாவுக்கு வந்தார். வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை அவர் செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேச இருக்கிறார்.
ஈரானிடம் இருந்துதான் இந்தியா அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வந்தது. ஈரான் மீது அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடை காரணமாக கடந்த 2-ஆம் தேதி முதல் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை இந்தியா முற்றிலுமாக நிறுத்திவிட்டது. இந்த சூழ்நிலையில் அந்நாட்டு அமைச்சரின் இந்தியப் பயணம் மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளதால் சர்வதேச நாடுகளின் ஆதரவைத் திரட்டும் நோக்கில் ஈரான் செயல்பட்டு வருகிறது. முன்னதாக அமைச்சர் ஜாவத், ரஷியாவுக்குப் பயணம் மேற்கொண்டு அந்நாட்டு வெளியுறவு அமைச்சரை சந்தித்துப் பேசினார்.
உலக அளவில் அதிகமாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் மூன்றாவது நாடாக இந்தியா விளங்குகிறது. கடந்த நிதியாண்டில் (2017-18) மட்டும் ரூ.5.9 லட்சம் கோடி மதிப்பிலான கச்சா எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்துள்ளது. பெட்ரோலியத் தேவைக்கு அரபு நாடுகளை சார்ந்தே நமது நாடு உள்ளது. அதிலும் குறிப்பாக ஈரானிடம் இருந்து அதிக அளவில் எண்ணெய் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. 
ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதாரத் தடையால் அந்நாட்டில் இந்தியா மேற்கொண்டு வரும் சாப்ஹார் துறைமுக மேம்பாட்டுத் திட்டம் பாதிக்கப்படாது என்று அமெரிக்கா ஏற்கெனவே அறிவித்துவிட்டது.
ஈரானின் சிஸ்தான்-பலூசிஸ்தான் மாகாணத்தில் அமைந்துள்ள சாப்ஹார் துறைமுகத்தின் வழியாக இந்தியாவுக்கு எளிதில் கப்பல் போக்குவரத்தை மேற்கொள்ள முடியும். மேலும், இந்தியா இனி பாகிஸ்தானை அணுகாமல் ஆப்கானிஸ்தான், ஐரோப்பிய நாடுகளுடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்திக் கொள்ள முடியும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com