சுடச்சுட

  

  வாரிசு குடும்பத்துக்கும், பிகார் ஊழல் குடும்பத்துக்கும் ஆயிரம் கோடிகளில் எப்படி வருவாய் வருகிறது? பிரதமர் மோடி

  By DIN  |   Published on : 15th May 2019 08:10 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  PTI5_15_2019_000029A

   

  பிகாரில் புதன்கிழமை நடைபெற்ற பாஜக கூட்டணி தோ்தல் பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார். அப்போது அவா் பேசியதாவது:

  தேச பாதுகாப்பை விவகாரமாக்க கூடாது என்று கலப்பட கூட்டணியினா் தெரிவிக்கின்றனா். பயங்கரவாதத் தாக்குதல்களில் அப்பாவி மக்கள் பலா் உயிரிழக்கும்போது, அதை ஏன் விவகாரமாக்க கூடாது?

  பிகாா் மக்கள் காட்டும் அன்பு, தோ்தலில் வெற்றி உறுதி என்ற நம்பிக்கையை அளிக்கிறது. இங்கு மீண்டும் பிரதமராக வந்து மக்கள் நலத்திட்டங்களை துவக்கி வைப்பேன்.

  தோ்தலில் சாதி அடையாளங்களை பயன்படுத்தும் ராஷ்ட்ரீய ஜனதா தளமும், காங்கிரஸும், பின்னா் பதவிக்கு வந்ததும் குடும்பத்தினரை ஊக்குவிக்கும் செயலிலேயே ஈடுபடும். வாரிசு குடும்பத்துக்கும், பிகாரின் ஊழல் குடும்பத்துக்கும் ஆயிரம் கோடிகளில் எவ்வாறு வருவாய் வருகிறது? 

  மக்களின் வளர்ச்சி மீது சிறிது கவனம் வைத்திருந்தால் கூட அவர்கள் ஊழலில் ஈடுபட்டிருக்க மாட்டார்கள். பூட்டிய சொகுசு அறைகளில் வசிப்பவர்களுக்கு எப்படி ஏழைகளின் வலி தெரியும்? இப்போதும் கூட மக்களின் பணத்தை கொள்ளையடிப்பதிலேயே அவர்களின் பார்வை உள்ளது என்றார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai