மக்களவைத் தேர்தல் முடிவுகளுக்குப் பின் பாஜகவுடன் பகுஜன் சமாஜ் கூட்டணி சேரும்: மாயாவதியின் முன்னாள் உதவியாளர்

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்தபிறகு, பாஜகவுடன் பகுஜன் சமாஜ் கூட்டணி சேர்ந்து விடும் என்று அக்கட்சித் தலைவர் மாயாவதியின் முன்னாள் உதவியாளரும்,


மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளிவந்தபிறகு, பாஜகவுடன் பகுஜன் சமாஜ் கூட்டணி சேர்ந்து விடும் என்று அக்கட்சித் தலைவர் மாயாவதியின் முன்னாள் உதவியாளரும், தற்போது காங்கிரஸ் கட்சியில் முக்கிய நிர்வாகியாக பதவி வகிப்பவருமான நஸிமுதீன் சித்திகி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பலியாவில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது அவர் மேலும் கூறியதாவது:
கடந்த காலத்தில் பாஜகவுடன் பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி கூட்டணி அமைத்துள்ளார். வரும் 23ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும்போது, பாஜகவுடன் அவர் சேர்ந்து விடுவார். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு, மாயாவதிக்கு இதுதொடர்பான நிர்பந்தம் ஏற்படும். 
பாஜகவுடன் பகுஜன் சமாஜ் கூட்டணி சேரும்பட்சத்தில், தேச நலன் மற்றும் உத்தரப் பிரதேச நலனுக்காக காங்கிரஸுடன் கை கோப்பதை தவிர சமாஜவாதிக்கு வேறு வழியில்லை. அரசியலில் எதுவும் சாத்தியமாகாது எனத் தெரிவிக்க முடியாது. மாயாவதியை 33 ஆண்டுகளாக எனக்கு தெரியும். மாயாவதிக்கு அவரை பற்றி தெரிந்ததை விட, எனக்கு அவரை பற்றி நன்குத் தெரியும்.
மாயாவதி மீது எனக்கு அதிக மரியாதை உள்ளது. அதேநேரத்தில் பகுஜன் சமாஜ் கட்சியில் மீண்டும் சேரும் திட்டம் கிடையாது.
பிரதமராக மாயாவதி பதவியேற்க வாய்ப்புள்ளதா? எனக் கேட்கிறீர்கள். இதுகுறித்து யாரும் எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை. பகுஜன் சமாஜுடன் கூட்டணி வைத்துள்ள சமாஜவாதி, ராஷ்ட்ரீய லோக் தளம் (ஆர்எல்டி) கட்சிகள் கூட, இதுகுறித்து எதுவும் தெரிவிக்கவில்லை.
சமாஜவாதி தலைவர் அகிலேஷ் யாதவ், நாட்டின் அடுத்த பிரதமர், உத்தரப் பிரதேசத்தை சேர்ந்தவராகத்தான் இருப்பார் என்று மட்டும்தான் தெரிவித்தார். அப்படியிருக்கையில், அடுத்த பிரதமராக மாயாவதி பதவியேற்பாரா? என்ற கேள்வி எங்கிருந்து எழுந்தது? என்று கேள்வியெழுப்பினார் சித்திகி.
பகுஜன் சமாஜ் கட்சியில் மாயாவதியின் நம்பகமான தலைவர்களில் ஒருவராக சித்திகி விளங்கினார். இருப்பினும் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், அக்கட்சியிலிருந்து விலகி, காங்கிரஸில் கடந்த ஆண்டு சித்திகி இணைந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com