மம்தாவுக்கு எதிராக பாஜக திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது: மாயாவதி

மம்தாவுக்கு எதிராக பாஜக திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது என்று பகுஜன்சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றஞ்சாட்டியுள்ளார்.
மம்தாவுக்கு எதிராக பாஜக திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது: மாயாவதி

மம்தாவுக்கு எதிராக பாஜக திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது என்று பகுஜன்சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொல்கத்தாவில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட வன்முறையை அடுத்து, மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரத்தை, வெள்ளிக்கிழமைக்கு பதிலாக ஒரு நாள்
முன்னதாகவே முடித்துக் கொள்வதற்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 

இதுகுறித்து தேர்தல் ஆணையம் புதன்கிழமை பிறப்பித்த உத்தரவில், மேற்கு வங்கத்தில் 9 மக்களவைத் தொகுதிகளுக்கான பிரசாரத்தை வியாழக்கிழமை (மே
16) இரவு 10 மணிக்குள் முடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்தல் நடவடிக்கைகளில் நேரடியாகத் தலையிட்டதற்காக, முதன்மைச்
செயலர் அட்ரி பட்டாச்சார்யா, சிஐடி கூடுதல் தலைமை இயக்குநர் ராஜீவ் குமார் ஆகிய இருவரையும் பொறுப்பில் இருந்து உடனடியாக விடுவித்தும் தேர்தல்
ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
 
இதுகுறித்து பகுஜன்சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறியதாவது,
மோடி, அமித்ஷா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மம்தாவுக்கு எதிராக திட்டமிட்டு செயல்படுகின்றனர். நாட்டின் பிரதமராக இருப்பவர் அநீதி இழைப்பது அவரது பதவிக்கு பொருத்தமாக இருக்காது. மேற்கு வங்காளத்தில் இன்று இரவு 10 மணி வரை பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது. ஏனென்றால் மாலையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பிரசார கூட்டங்கள் நடைபெற உள்ளது.

தடைவிதிக்க வேண்டும் என முடிவெடுத்த தேர்தல் ஆணையம், அதை காலை 10 மணி முதலே அறிவித்திருக்கலாமே? தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் நியாயமற்றது. நிர்பந்தத்தால் ஆணையம் பாரபட்சமாக செயல்படுகிறது என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com