அமித் ஷா கடவுளும் இல்லை, மம்தா துறவியும் இல்லை: சிவசேனை

பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கடவுளும் இல்லை; மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி துறவியும் இல்லை என்று சிவசேனை தெரிவித்தது.


பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா கடவுளும் இல்லை; மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி துறவியும் இல்லை என்று சிவசேனை தெரிவித்தது.
மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் வன்முறை ஏற்பட்டதை அடுத்து, அமித் ஷா கடவுள் இல்லை என்று மம்தா கூறியிருந்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சிவசேனை இவ்வாறு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில் வியாழக்கிழமை வெளியான தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
ஜனநாயக அடிப்படையில் மம்தா பானர்ஜியின் அரசு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அவருடைய வெற்றியும், தோல்வியும் ஜனநாயக அடிப்படையிலேயே தீர்மானிக்கப்படவுள்ளது.
பிரதமர் மோடியையும், அமித் ஷாவையும் சாலையில் இடைமறிப்பதால் மட்டுமே மம்தாவால் வெற்றி பெற்றுவிட முடியாது. அமித் ஷா கடவுள் இல்லை. அதேபோல், மம்தாவும் கடவுளோ அல்லது துறவியோஅல்ல. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைமையிலான ஆட்சி மேற்கு வங்கத்தில் நடைபெற்ற காலத்தில் வன்முறை இருந்தது. தற்போது மம்தா ஆட்சியிலும் அந்தக் கதை தொடர்கிறது. வன்முறைகள் காரணமாக மேற்கு வங்கம் பாதிக்கப்பட்டுள்ளது என்று சாம்னா தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில், சமூக சீர்திருத்தவாதியான 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் சிலை வன்முறையில் சேதப்படுத்தப்பட்டது.  பாஜகவினர்தான் சிலையை சேதப்படுத்திவிட்டதாக திரிணமூல் காங்கிரஸ் புகார் அளித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com