பிகார்: ரவிசங்கர் பிரசாத்துக்கு ஆதரவாக யோகி ஆதித்யநாத் பிரசாரம்

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான வழக்கில் வழக்குரைஞராக இருந்த மத்திய அமைச்சரும், பாஜக வேட்பாளருமான ரவிசங்கர் பிரசாத்துக்கு
பிகார்: ரவிசங்கர் பிரசாத்துக்கு ஆதரவாக யோகி ஆதித்யநாத் பிரசாரம்


அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான வழக்கில் வழக்குரைஞராக இருந்த மத்திய அமைச்சரும், பாஜக வேட்பாளருமான ரவிசங்கர் பிரசாத்துக்கு  அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று உத்தரப் பிரதேச முதல்வரும், பாஜக மூத்த தலைவருமான யோகி ஆதித்யநாத் வலியுறுத்தினார்.
பிகாரில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அதில் 6 கட்ட தேர்தல் முடிவுற்ற நிலையில் நாளந்தா, பாட்னாசாஹிப் உள்ளிட்ட 8 மக்களவைத் தொகுதிகளுக்கு வரும் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.
பாட்னாசாஹிப் மக்களவைத் தொகுதியில் எம்.பி.யும், பாஜகவில் இருந்து காங்கிரஸுக்கு மாறியவருமான சத்ருகன் சின்ஹாவை எதிர்த்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் போட்டியிடுகிறார். இதையொட்டி, பாட்னாவில்  நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ரவிசங்கர் பிரசாத்தை ஆதரித்து யோகி ஆதித்யநாத் பேசியதாவது:
பிகார் மாநிலத்தில் அதிக அளவில் ராம பக்தர்கள் உள்ளனர். அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற வாதாடிய ரவிசங்கர் பிரசாத் பாட்னாசாஹிப்பில் போட்டியிடுகிறார். அதுமட்டுமன்றி, முத்தலாக் என்ற பெயரில், முஸ்லிம் பெண்களுக்கு இழைக்கப்பட்ட வந்த  கொடுமையை நீக்க சட்டம் இயற்ற முன் வந்தார். மத்திய சட்ட அமைச்சராக மக்களுக்கு பல நன்மைகளை அவர் செய்துள்ளார். அதனால் பாட்னாசாஹிப் தொகுதி மக்கள் அனைவரும் அவருக்கு வாக்களிக்க வேண்டும் என்றார்.
புதன்கிழமை இரவு நடைபெறவிருந்த கூட்டத்துக்கு தாமதமாக வந்ததற்காக வருத்தம் தெரிவித்த யோகி ஆதித்யநாத், நான் இவ்வளவு தாமதமாக வந்தும் எனக்காக காத்திருக்கும் உங்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நான் மேற்கு வங்கத்தில் பிரசாரம் முடித்து விட்டு இங்கு வருகிறேன். அங்கு நான் மேற்கொள்ளவிருந்த பிரசாரங்களுக்கு அரசு அனுமதியளிக்கவில்லை. பிரசாரத்துக்கு அனுமதியளிக்க வேண்டும் என்று மக்கள் மூலமாக வலியுறுத்துவேன் என்று கூறிய பிறகு அவர்கள் என்னை அனுமதித்தார்கள். அதுவும் மிகவும் தாமதமாக அனுமதித்தார்கள். அதனால்தான் என்னால் இங்கு சரியான நேரத்துக்கு வர இயலவில்லை.
பிகாரில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக கூட்டணி அரசு ஆட்சி செய்கிறது. இங்கு சட்டம், ஒழுங்கு பிரச்னைகள் ஏதுமன்றி மக்கள் அமைதியாக வாழ்கிறார்கள். ஆனால் மேற்கு வங்கத்தில் வன்முறை சம்பவங்கள் மட்டுமே நிகழ்கின்றன. அதுமட்டுமன்றி அங்கு நடைபெற்ற வன்முறையால், தேர்தல் பிரசாரத்துக்கான கால அளவை தேர்தல் ஆணையம் குறைத்து விட்டது. இத்தகைய சம்பவங்கள் பாஜக ஆட்சியில் நிகழாது.
நாடு முழுவதும் உள்ள மக்கள், நரேந்திர மோடியே மீண்டும் பிரதமராக வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதனால்  அனைத்து எதிர்க்கட்சிகளும் அச்சத்தில் உள்ளன என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com