பாஜக தலைமையிலான அரசில் இருந்து வெளியேற முடிவு: நாகா மக்கள் முன்னணி

மணீப்பூரில் பாஜக தலைமையில் நடைபெறும் ஆட்சியில் இருந்து விலகுவதாக நாகா மக்கள் முன்னணி இன்று (சனிக்கிழமை) அறிவித்தது. 
பாஜக தலைமையிலான அரசில் இருந்து வெளியேற முடிவு: நாகா மக்கள் முன்னணி


மணீப்பூரில் பாஜக தலைமையில் நடைபெறும் ஆட்சியில் இருந்து விலகுவதாக நாகா மக்கள் முன்னணி இன்று (சனிக்கிழமை) அறிவித்தது. 

நாகாலாந்தில், நாகா மக்கள் முன்னணி கட்சியில் கடந்த சில நாட்களாகவே பல குழப்பங்கள் எழுந்து வருகிறது. மக்களவைத் தேர்தலில் ஆளும் தேசியவாத ஜனநாயக முற்போக்குக் கட்சிக்கு ஆதரவாக வெளிப்படையாக பிரசாரம் மேற்கொண்டதாக 7 சட்டப்பேரவை உறுப்பினர்களை இடைநீக்கம் செய்தது. அவர்களை தகுதி நீக்கம் செய்வதற்கான மனுவையும் சபாநாயகரிடம் அளித்தது. அதேசமயம், 7 சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட கட்சித் தலைவர்களும் ராஜிநாமா செய்தனர். 

நாகாலாந்தில் கட்சிக்குள் நிகழும் பிரச்னைகளுக்கு பாஜக தான் காரணம் என்று நாகா மக்கள் முன்னிணி சந்தேகிக்கிறது. நாகாலாந்தில் மாநில அரசின் கூட்டணியில் பாஜகவும் உள்ளது.  

இந்த நிலையில் மணீப்பூரில் பாஜக தலைமையிலான ஆட்சியில் இருந்து வெளியேறுவதாக அக்கட்சி அறிவித்துள்ளது. இதன்மூலம், நாகாலாந்தில் கட்சிக்குள் எந்த குழப்பத்தையும் ஏற்படுத்த வேண்டாம் என்ற செய்தியையே பாஜகவிடம் வெளிப்படையாக தெரிவிப்பதற்காக தான் எடுக்கப்பட்ட முடிவுபோல் தெரிகிறது.   

எனினும், பாஜக மற்றும் தேசிய மக்கள் கட்சியின் மக்கள் ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு இதனால் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை. மணீப்பூரில் மொத்தம் உள்ள 60 சட்டப்பேரவை உறுப்பினர்களில் பாஜக தலைமையிலான கூட்டணி 40 உறுப்பினர்களுடன் பலமாகவே உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com