சுடச்சுட

  

  தொலைக்காட்சியின் மனதின் குரல் நிகழ்ச்சி தான் மோடியின் பேட்டி: எதிர்கட்சிகள் கிண்டல்

  By DIN  |   Published on : 18th May 2019 01:29 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  rahul_smile

   

  மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான வெள்ளிக்கிழமை தில்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் அக்கட்சியின் தேசியத் தலைவர் அமித் ஷா செய்தியாளர்களைச் சந்திப்பதாக அறிவிக்கப்பட்டது.

  கடந்த 5 ஆண்டுகளாக பாஜக கூட்டணி ஆட்சியின் சாதனைகளை விளக்குவதற்காக இந்த செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் அனைவருக்கும் வியப்பளிக்கும் வகையில் பிரதமர் மோடியும் பங்கேற்றார்.

  தொலைக்காட்சியின் மனதின் குரல் நிகழ்ச்சி தான் மோடியின் பேட்டி என்று இதுகுறித்து எதிர்கட்சிகள் விமர்சித்துள்ளன. இது பிரதமர் நரேந்திர மோடியின் கடைசி மனதின் குரல் நிகழ்ச்சியாக அமைந்தது. ஆனால், வானொலிக்குப் பதிலாக தொலைக்காட்சியில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது மட்டும் தான் வித்தியாசம் என்று சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் விமர்சித்தார்.

  இது பாஜகவின் பிரிவு உபசார விழா போன்று இருந்தது என்று லோக்தந்த்ரிக் ஜனதாதளக் கட்சித் தலைவர் ஷரத் யாதவ் குறிப்பிட்டார். கடந்த 5 ஆண்டுகளில் செய்தியாளர்களை மோடி சந்திப்பது இதுவே முதன்முறை. அதுவே அனைவரின் கேள்வியாகவும் இருந்தது. இந்த தேர்தலில் தனது தோல்வியை மோடி பிரதிபலிப்பதாக இந்த பேட்டி அமைந்துள்ளதாக ஷரத் யாதவ் ட்வீட் செய்துள்ளார்.

  செய்தியாளர்கள் என்ற பெயரில் இருந்த பாஜகவினருக்கு நன்றி கூற அமித் ஷா மறக்கவில்லை என்று ஒமர் அப்துல்லா கூறினார். ஒருவருக்காக மற்றொருவர் பதில் கூறும் ஒரு செய்தியாளர்கள் சந்திப்பை இப்போதுதான் முதன்முறையாக பார்க்கிறேன் என்று காங்கிரஸ் மூத்த தலைவர் அகமது படேல் குறிப்பிட்டார்.

  நரேந்திர மோடிக்கு வாழ்த்துகள், இது மிகச்சிறந்த செய்தியாளர்கள் சந்திப்பாக அமைந்துவிட்டது. இந்த முறை நீங்கள் பங்கேடுத்ததே பெரிய விஷயம். அடுத்த முறை உங்களுக்காக ஓரிரு கேள்விகளுக்கு பதிலளிக்க அமித் ஷா நிச்சயம் வாய்ப்பளிப்பார் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் விமர்சித்துள்ளார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai