காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் சோனியா முக்கிய ஆலோசனை

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுடன், அக்கட்சியின் முன்னாள் தலைவரும், கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் தாயாருமான
காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் சோனியா முக்கிய ஆலோசனை


புது தில்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களுடன், அக்கட்சியின் முன்னாள் தலைவரும், கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் தாயாருமான சோனியா காந்தி சனிக்கிழமை முக்கிய ஆலோசனை நடத்தினார்.

இதுகுறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது:
தில்லியில் உள்ள தனது இல்லத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அகமது படேல், ஏ.கே. அந்தோணி மற்றும் பிற தலைவர்களுடன் சோனியா காந்தி முக்கிய ஆலோசனை நடத்தினார். ராகுல் காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கும் இந்த ஆலோசனையில் பங்கெடுத்தனர்.

மக்களவைத் தேர்தல் முடிந்து, தொங்கு மக்களவை அமைந்தால் காங்கிரஸ் கட்சி செயல்பட வேண்டிய விதம் குறித்து அவர்கள் ஆலோசித்துள்ளனர். மத்தியில் ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு கிடைத்தால், அதை விட்டுவிடக் கூடாது, ஆட்சியமைக்க உரிமை கோரும் விவகாரத்தில் விரைந்து முடிவெடுத்து செயல்படுவது குறித்தும் விவாதித்துள்ளனர்.

உடல்நல பிரச்னையின் காரணமாக அரசியலில் இருந்து சோனியா காந்தி ஒதுங்கியிருந்து வருகிறார். ஆனால் தில்லியில் கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியதன் மூலம், அரசியலில் அவர் மீண்டும் ஆர்வம் காட்டத் தொடங்கியிருப்பது தெரிகிறது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் வரும் 22ஆம் தேதி, கட்சியின் மூத்த தலைவர்கள் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். முன்னதாக, தில்லியில் தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு, காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஆகியோரை ராகுல் காந்தி சனிக்கிழமை சந்தித்தார். அப்போது அகமது படேல், ஏ.கே. அந்தோணி ஆகியோரிடம், பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தும்படி கேட்டுக்கொண்டார் என்றும் அந்த வட்டாரங்கள் குறிப்பிட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com