சுடச்சுட

  

  அதனை அறிந்தவுடன் ஒட்டுமொத்த எதிர்கட்சிகளும் அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளன: கிரிராஜ் சிங்

  By ANI  |   Published on : 20th May 2019 12:20 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Giriraj_Singh

   

  ஒட்டுமொத்த எதிர்கட்சிகளும் அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங் விமர்சித்துள்ளார். 

  மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்று பெரும்பாலான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. 

  300-க்கும் அதிகமான தொகுதிகளைக் கைப்பற்றி மீண்டும் பாஜக ஆட்சி அமைவதற்கான வாய்ப்புகள் உருவாகியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

  இந்நிலையில், பாஜக மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான கிரிராஜ் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில், மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு என ஒட்டுமொத்த எதிர்கட்சிகளும் இந்த தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை அறிந்தவுடன் அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளன.

  எனவே மே 23-ஆம் தேதிக்கு பிறகு தங்களது அரசியல் எதிர்காலம் குறித்து இவர்கள் சிந்திக்க வேண்டியிருக்கும் என்று பதிவிட்டுள்ளார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai