தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் எதிர்க்கட்சித் தலைவர்கள் நாளை சந்திப்பு

தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் தேர்தல் ஆணைய அதிகாரிகளை நாளை (செவ்வாய்கிழமை) சந்திக்கவுள்ளனர். 
தேர்தல் ஆணைய அதிகாரிகளுடன் எதிர்க்கட்சித் தலைவர்கள் நாளை சந்திப்பு


தேர்தல் முடிவுகள் மே 23-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்கள் தேர்தல் ஆணைய அதிகாரிகளை நாளை (செவ்வாய்கிழமை) சந்திக்கவுள்ளனர். 

17-வது மக்களவைத் தேர்தல் நேற்றுடன் நிறைவடைந்தது. இதன் முடிவுகள் வரும் 23-ஆம் தேதி வெளியாகிறது. இதனிடையே, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் நேற்று வெளியாகின. 

இந்த நிலையில், 21 எதிர்க்கட்சித் தலைவர்கள் நாளை தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின் போது வாக்கு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை உச்சநீதிமன்ற அறிவுரையின்படி வாக்கு ஒப்புகைச் சீட்டுடன் சரிபார்க்க வேண்டும் என்பது குறித்து வலியுறுத்தப் போவதாக தெரிகிறது. 

ஒவ்வொரு தொகுதியிலும் 50 சதவீத வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் ஒரு வாக்குச் சாவடிக்கு பதிலாக 5 வாக்குச் சாவடிகளில் வாக்கு ஒப்புகைச் சீட்டுகளை சரிபார்க்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. 

இதையடுத்து, இந்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவை தாக்கல் செய்தது. ஆனால், உச்சநீதிமன்றம் எதிர்க்கட்சிகளின் மறு ஆய்வு மனுக்களை தள்ளுபடி செய்தது.

வாக்கு இயந்திரத்தில் கோளாறுகள், முறைகேடுகள் நிகழ வாய்ப்புள்ளதால் , வாக்கு ஒப்புகைச் சீட்டை சரிபார்க்க வேண்டும் என்ற கருத்தில் எதிர்க்கட்சிகள் தொடக்கம் முதலே உறுதியாக இருந்து வந்தது. எனவே, வாக்கு எண்ணிக்கையின் போது வாக்கு ஒப்புகைச் சீட்டை சரிபார்ப்பதில் உச்சநீதிமன்ற அறிவுரையை பின்பற்ற வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தவுள்ளன.    
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com