சுடச்சுட

  

  உண்மைக்காக போராடும் நமக்கு அடுத்த 24 மணிநேரம் முக்கியமானது: ராகுல்

  By DIN  |   Published on : 22nd May 2019 06:03 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Gujarat court summons Rahul Gandhi

   

  உண்மைக்காக போராடும் நமக்கு அடுத்த 24 மணிநேரம் முக்கியமானது என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் புதன்கிழமை எச்சரித்தார். இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டதாவது:

  காங்கிரஸ் தொண்டர்களே, அடுத்த 24 மணிநேரம் நமக்கு மிகவும் முக்கியமானது. எதற்கும் அஞ்சாமல் தைரிமாகவும், விழிப்புடனும் இருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால் நாமெல்லாம் உண்மைக்காக போராடுகிறோம் என்று தெரிவித்துள்ளார். 

  மேலும், போலியான தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளைக் கண்டு யாரும் ஏமாற்றமடைய வேண்டாம். உங்கள் மீதும், காங்கிரஸ் கட்சி மீதும் நம்பிக்கை வைத்திருங்கள். உங்கள் அனைவரின் கடின உழைப்பும் வீண்போகாது என குறிப்பிட்டுள்ளார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai