மேற்கு வங்கம், கேரள தேர்தல் வன்முறைகளுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி கண்டனம்

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குப் பெரும்பான்மை கிடைக்கும் என்று பெரும்பாலான வாக்குக் கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ள நிலையில், தில்லியில் அந்த கூட்டணிக்
தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடிக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்த தமிழக முதல்வர் கே.பழனிசாமி. உடன், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் கூட்டத்தில், பிரதமர் நரேந்திர மோடிக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்த தமிழக முதல்வர் கே.பழனிசாமி. உடன், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம்.


மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குப் பெரும்பான்மை கிடைக்கும் என்று பெரும்பாலான வாக்குக் கணிப்பு முடிவுகள் தெரிவித்துள்ள நிலையில், தில்லியில் அந்த கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில், மேற்கு வங்கம், கேரள தேர்தல் வன்முறைகளுக்கு கண்டனம் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை (மே 23) எண்ணப்பட உள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணித் தலைவர்களுக்கு பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தில்லியில் செவ்வாய்க்கிழமை விருந்தளித்தார். பிரதமர் மோடி கலந்து கொண்ட இந்த விருந்தில் தேர்தலுக்கு பிந்தைய நிலவரங்கள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இதில் அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக முதல்வருமான எடப்பாடி கே.பழனிசாமி, அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். மேலும், பிகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளத்தின் தலைவருமான நிதீஷ் குமார், சிவசேனைக் கட்சியின் தலைவர் உத்தவ் தாக்கரே, லோக் ஜனசக்தி கட்சியின் தலைவர் ராம் விலாஸ் பாஸ்வான், சிரோமணி அகாலி தளம் தலைவர் பிரகாஷ் சிங் பாதல், அப்னா தளம் தலைவர் அனுப்ரியா படேல் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி ஆகியோரும் பங்கேற்றனர்.
இதில், தேர்தல் முடிவுகள் சாதகமாக அமைந்தால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும், பாதகமாக அமைந்தால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும்  ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. மேலும், மேற்கு வங்கம், கேரளம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற வன்முறைகளுக்கு தேசிய ஐனநாயகக் கூட்டணி கூட்டதில் கண்டனம் தெரிவித்து, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அந்தத் தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்தியாவில் வாழும்130 கோடி மக்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்யும் வகையில், தேசிய ஜனநாயகக் கூட்டணி செயல்பட்டு வருகிறது. கடந்த 5 ஆண்டுகளில் பிரதமர் மோடியின் தலைமையில் நாடு வளர்ச்சிப் பாதையில் செல்கிறது. 
மோடி ஆட்சியில் வரலாற்றுத் தவறுகள் திருத்திக் கொள்ளப்பட்டுள்ளன. பல்வேறு மக்கள் நலத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் புகழ் உயர்ந்துள்ளது. நாட்டின் பாதுகாப்பு தொடர்பாக சகிப்பில்லா கொள்கையை பின்பற்றி வருகிறோம். 
மேற்கு வங்கம், கேரளம் ஆகிய மாநிலங்களில்  நடைபெறும் அரசியல் வன்முறைகளுக்கு கூட்டம் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது. தலைமைக் கணக்குத் தணிக்கையாளர், தேர்தல் ஆணையம், நீதித் துறை, காவல் துறை, பாதுகாப்புப் படைகள் மீது எதிர்க்கட்சிகளால் திட்டமிட்டு நடத்தப்படும் தாக்குதல்களைக் கண்டிக்கிறோம் என்று தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில், தமிழகத்தில் இருந்து பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், தேமுதிக  பொருளாளர் பிரேமலதா, துணைப் பொருளாளர் எல்.கே. சுதீஷ், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏசி சண்முகம்  உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும்,  தமிழக அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோரும் பங்கேற்றனர்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக தேவையில்லாத சர்ச்சை
தில்லியில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சிகள், தேவையில்லாத சர்ச்சையை உருவாக்கியுள்ளன; சாதிகள் அடிப்படையிலானஅணுகுமுறை மாற வேண்டும், ஏழைகள் நலன் சார்ந்ததாக அணுகுமுறை இருத்தல் வேண்டும் என்றார்.
கூட்டத்தில் மத்தியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வரும்பட்சத்தில், அடுத்த 5 ஆண்டுகளுக்கு செயல்பட வேண்டிய திட்டம் முன்வைக்கப்பட்டது. 
இந்தியா சுதந்திரமடைந்து 2022ஆம் ஆண்டுடன் 75 ஆண்டுகள் நிறைவு ஆகிறது. இதற்குள் வலுவான, வளர்ச்சியடைந்த, அபிவிருத்தியான நாடாக இந்தியாவை உருவாக்க உறுதியெடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்தை பாஜக கூட்டணி கட்சியான லோக் ஜனசக்தி கட்சித் தலைவரும், மத்திய அமைச்சருமான ராம்விலாஸ் பாஸ்வான் முன்மொழிந்தார் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com