வெளிநாடு செல்ல அனுமதி கோரி நீதிமன்றத்தில் வதேரா மனு

லண்டன் பிரையன்ஸ்டன் சதுக்கத்திலுள்ள அடுக்கு மாடி குடியிருப்பு கட்டடத்தில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மூலம் வீடு வாங்கியதாக
வெளிநாடு செல்ல அனுமதி கோரி நீதிமன்றத்தில் வதேரா மனு


லண்டன் பிரையன்ஸ்டன் சதுக்கத்திலுள்ள அடுக்கு மாடி குடியிருப்பு கட்டடத்தில் சட்டவிரோத பணப்பரிவர்த்தனை மூலம் வீடு வாங்கியதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் மருமகன் ராபர்ட் வதேரா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. 
இந்த வழக்கில் காவல் துறை தன்னை கைது செய்துவிடக் கூடாது என்பதற்காக,  முன்ஜாமீன் கோரி தில்லி நீதிமன்றத்தில் வதேரா மனு தாக்கல் செய்தார். 
அப்போது, வெளிநாடுகளுக்கு நீதிமன்றத்தின் அனுமதி இன்றி செல்லக் கூடாது உள்ளிட்ட சில நிபந்தனைகளின் அடிப்படையில் வதேராவுக்கு முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், வெளிநாடு செல்ல அனுமதி கோரி தில்லி நீதிமன்றத்தில் வதேரா தரப்பில் செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு சிறப்பு நீதிபதி அரவிந்த் குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, வதேரா தரப்பு வழக்குரைஞர் வாதாடுகையில், பாதுகாப்பு காரணங்களுக்காக, வதேராவின் பயணம் குறித்த தகவலை மற்றவர்களுக்கு தெரியப் படுத்த வேண்டாம் என்றும், மூத்த வழக்குரைஞர் இல்லாததால், இந்த மனு மீதான விசாரணையை வரும் 24-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்குமாறும் நீதிபதியிடம் வேண்டுகோள் விடுத்தார். அதையேற்ற நீதிபதி, வதேராவின் மனு மீதான விசாரணையை 24-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com