அந்தமானில் மிதமான நிலநடுக்கம்

அந்தமான்- நிகோபார் தீவுகளில் புதன்கிழமை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5. 8 அலகுகளாக பதிவாகியுள்ளது.
அந்தமானில் மிதமான நிலநடுக்கம்


அந்தமான்- நிகோபார் தீவுகளில் புதன்கிழமை மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5. 8 அலகுகளாக பதிவாகியுள்ளது.
இதுதொடர்பாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
அந்தமான் தீவுக்கு அருகே கடலுக்கு அடியில் 10 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. அந்தமானில் புதன்கிழமை காலை 6.09 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 5. 8 அலகுகளாக பதிவாகியுள்ளது.  
முன்னதாக, நிகோபார் தீவுகளில் செவ்வாய்க்கிழமை அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 4. 8 அலகுகளாக பதிவாகியுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அந்தமான்-நிகோபார் தீவுகளின் புவியியல் அமைப்பு, அடிக்கடி நிலக்கடி நிலநடுக்கம் ஏற்படும் மண்டலத்தில் அமைந்துள்ளது. அங்கு நிலநடுக்கங்கள் ஏற்படுவது வழக்கமான ஒன்றாகும். அங்கு நாளொன்றுக்கு 2 முதல் 3 முறை நிலநடுக்கங்கள் ஏற்படுவது இயல்பானது. 
கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி அந்தமான்-நிகோபார் தீவுகளில் 20 முறை நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com