ஐஎல்எஃப்எஸ் முறைகேடு: மும்பையில் அமலாக்கத்துறை சோதனை

ஐஎல்எஃப்எஸ் நிறுவனத்தினர் நடத்திய பல கோடி ரூபாய்  நிதி மோசடி மற்றும் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மும்பையில் புதன்கிழமை அதிரடி சோதனை மேற்கொண்டனர். 


ஐஎல்எஃப்எஸ் நிறுவனத்தினர் நடத்திய பல கோடி ரூபாய்  நிதி மோசடி மற்றும் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் மும்பையில் புதன்கிழமை அதிரடி சோதனை மேற்கொண்டனர். 
ஐஎல்எஃப்எஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 4 இயக்குநர்களின் இல்லங்கள் மற்றும் அலுவலகங்களில் இந்தச் சோதனை மேற்கொள்ளப்பட்டது. 
கடந்த பிப்ரவரி மாதத்தில், பண மோசடி தடுப்புச்சட்டத்தின்கீழ் (பிஎம்எல்ஏ)  பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பான ஆதாரங்கள் இந்த சோதனையின் மூலம் கைப்பற்றப்பட்டதாகவும், வழக்கு தொடர்பான கூடுதல் ஆதாரங்களை சேகரிக்கவும், ஆவணங்களை கைப்பற்றவும் இந்த சோதனை நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
முன்னதாக, இந்திய சிறு தொழில்கள் வளர்ச்சி வங்கியிடம் இருந்து,  ஐஎல்எஃப்எஸ் நிறுவனம் மற்றும் அதன் சார்பு நிறுவனங்கள் சார்பில் முறைகேடாக ரூ.91 ஆயிரம் கோடி கடன் தொகையை மானியத்துடன் பெற்றது. இத்தொகையை திருப்பி செலுத்தாமல் மோசடி செய்ய முயன்றதால், கடந்த 2018ஆம் ஆண்டு ஐஎல்எஃப்எஸ் மற்றும் சார்பு நிறுவனங்கள் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர். 
தில்லியிலுள்ள அமலாக்கத்துறையின் பொருளாதார குற்றப்பிரிவுப்படை அதிகாரிகள் மூலம் கடந்த ஆண்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. 
இதுதொடர்பாக, என்சோ உள்கட்டமைப்பு நிறுவனத்தின் இயக்குநர் ஆஷிஷ் பெக்வானி என்பவர்,ஐஎல்எஃப்எஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் நடத்திய மோசடி நடவடிக்கைகளால் தனது நிறுவனத்துக்கு ரூ.70 கோடி இழப்பு ஏற்பட்டதாக  கொடுப்பட்ட புகார் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதேபோல, 2010ஆம் ஆண்டு மேலும் இரண்டு ஐஎல்எஃப்எஸ் அதிகாரிகள் தன்னை தொடர்பு கொண்டு ரூ.170 கோடி மதிப்பிலான முதலீடு செய்ய  விரும்புவதாகவும், அதற்கு ஈடாக 15 சதவீதம் பங்குகளை தங்களுக்கு அளிக்க வேண்டும் எனக்கூறி மோசடியில் ஈடுபட்டதாக  அந்தப் புகாரில் தெரிவித்திருந்தார். 
இதுகுறித்து அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் கூறுகையில், புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ள காலகட்டங்களில் ஐஎல்எஃப்எஸ் நிறுவனம் கடனாக பெற்றத் தொகையை முதலீடு செய்யாமல் முறைகேட்டில் ஈடுபட்டதும், தவறான வழியில் பயன்படுத்தியதுடன், லாபகரமாக இயங்கவில்லை என்பதும் தெரிய வந்ததால், வழக்குப்பதிவு செய்து, அந்நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக தெரிவித்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com