வன்முறைக்கு வாய்ப்பு : எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

வாக்கு எண்ணிக்கையின்போது சில அமைப்புகள் வன்முறையில் ஈடுபடுவதற்கு திட்டமிட்டிருப்பதால், எச்சரிக்கையுடன் இருக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய உள்துறை
வன்முறைக்கு வாய்ப்பு : எச்சரிக்கையுடன் இருக்குமாறு மாநில அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்


வாக்கு எண்ணிக்கையின்போது சில அமைப்புகள் வன்முறையில் ஈடுபடுவதற்கு திட்டமிட்டிருப்பதால், எச்சரிக்கையுடன் இருக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த அமைச்சகம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கையை சீர்குலைக்கும் விதமாக, வன்முறையில் ஈடுபடப்போவதாக பல்வேறு தரப்புகள் மிரட்டல் விடுத்துள்ளன. எனவே, எச்சரிக்கையுடன் இருக்குமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமைச் செயலர்களுக்கும், காவல் துறை தலைவர்களுக்கும் (டிஜிபி) உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. மேலும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கும், வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கும் போதிய பாதுகாப்பு  அளிக்கப்பட வேண்டும் என்றும்  அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:
உத்தரப் பிரதேசம், மேற்கு வங்கம், பிகார், திரிபுரா ஆகிய மாநிலங்களில் சில அமைப்புகளும் வாக்கு எண்ணிக்கைக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாகவும், வன்முறையைத் தூண்டும் விதமாகவும் பேசியிருப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, எச்சரிக்கையுடன் இருக்குமாறு அனைத்து மாநில அரசுகளுக்கும் உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது என்றார் அவர்.
மக்களவைத் தேர்தல், கடந்த ஏப்ரல் 11-ஆம் தேதி தொடங்கி, மே மாதம் 19-ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com