5.50 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற பாஜக வேட்பாளர்கள்

பாஜகவின் மேற்கு தில்லி தொகுதி வேட்பாளர் பர்வேஷ் வர்மா, வடமேற்கு தில்லி தொகுதி வேட்பாளர் ஹன்ஸ்ராஜ் ஹன்ஸ் ஆகியோர் சுமார் 5.50 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்றுள்ளனர்
5.50 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வென்ற பாஜக வேட்பாளர்கள்

பாஜகவின் மேற்கு தில்லி தொகுதி வேட்பாளர் பர்வேஷ் வர்மா, வடமேற்கு தில்லி தொகுதி வேட்பாளர் ஹன்ஸ்ராஜ் ஹன்ஸ் ஆகியோர் சுமார் 5.50 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்றுள்ளனர். 
மேற்கு தில்லி தொகுதியில் பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மா மீண்டும் அக்கட்சி சார்பில் போட்டியிட்டார். இத்தொகுதியில் கடந்த 2009-ஆம் ஆண்டு காங்கிரஸ் சார்பில் களம் கண்ட மஹபல் மிஸ்ரா, மீண்டும் பர்வேஷ் வர்மாவுக்கு எதிராக களமிறக்கப்பட்டார். ஆம் ஆத்மி சார்பில் பல்பீர் சிங் ஜாக்கர் போட்டியிட்டார். 
தேர்தல் ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, தேர்தல் முடிவில் பர்வேஷ் வர்மா 8,65,648 வாக்குகள் பெற்றார். மஹபல் மிஸ்ரா 2,87,162 வாக்குகளுடன் இரண்டாமிடமும், பல்பீர் சிங் ஜாக்கர் 2,51,873 வாக்குகளுடன் மூன்றாமிடமும் பெற்றனர். 
இதன்மூலம், பர்வேஷ் வர்மா 5,78,486 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றார். மேலும், தில்லியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். 
கடந்த 2014 மக்களவைத் தேர்தலிலும், 2,68,586 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று "தில்லியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றவர்' என்ற பெருமையை அவர் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 
அதேபோல, வடமேற்கு தில்லி பாஜக வேட்பாளர் ஹன்ஸ்ராஜ் ஹன்ஸ் மொத்தம் 8,48,663 வாக்குகள் பெற்றார். அவர், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஆம் ஆத்மியின் குஹன் சிங்கை விட 5,53,897 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். குஹன் சிங் 2,94,766 வாக்குகளும், அவருக்கு அடுத்த இடம் பிடித்த காங்கிரஸின் ராஜேஷ் லிலோத்தியா 2,36,882 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
இதர தொகுதிகளைப் பொருத்த வரையில் வடகிழக்கு தில்லியில் பாஜக வேட்பாளர் மனோஜ் திவாரி 7,87,799 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் ஷீலா தீட்சித் 4,21,697 வாக்குகளும், ஆம் ஆத்மி வேட்பாளர் திலீப் பாண்டே 1,90,856 வாக்குகளும் பெற்றனர்.
சாந்தினி செளக்கில் பாஜக வேட்பாளர் ஹர்ஷ் வர்தன் 5,19,055 வாக்குகள் பெற்று காங்கிரஸ் வேட்பாளர் ஜே.பி. அகர்வாலை வீழ்த்தினார். அகர்வால் 2,90,910 வாக்குகளும், அடுத்தபடியாக ஆம் ஆத்மியின் பங்கஜ் குமார் குப்தா 1,44,551 வாக்குகளும் பெற்றனர்.
புது தில்லி தொகுதியில் பாஜகவின் மீனாட்சி லேகி 5,04,206 வாக்குகளுடன் வெற்றி பெற, காங்கிரஸ் கட்சியின் அஜய் மாக்கன் 2,47,702 வாக்குகளும், ஆம் ஆத்மியின் பிரிஜேஷ் கோயல் 1,50,342 வாக்குகளும் பெற்றனர்.
தெற்கு தில்லியில் பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதூரி 6,87,014 வாக்குகள் பெற்று வாகை சூடினார். ஆம் ஆத்மியின் ராகவ் சத்தா 3,19,971 வாக்குகளுடம் இரண்டாமிடமும், காங்கிரஸ் வேட்பாளரும், குத்துச்சண்டை வீரருமான விஜேந்தர் சிங் 1,64,613 வாக்குகளுடன் மூன்றாமிடமும் பிடித்தனர்.
கிழக்கு தில்லியில் பாஜக வேட்பாளர் கெளதம் கம்பீர் 6,96,156 வாக்குகளுடன் வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் அரவிந்தர் சிங் லவ்லி 3,04,934 வாக்குகளும், ஆம் ஆத்மி வேட்பாளர் அதிஷி மர்லினா 2,19,328 வாக்குகளும் பெற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com