சுடச்சுட

  

  விரைவில் புதிய அரசியல் கட்சியை தொடங்குவேன்: நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த நடிகர் பேட்டி 

  By DIN  |   Published on : 26th May 2019 02:30 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  prakash-raj

   

  பெங்களூரு: விரைவில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவேன் என்று சமீபத்தில் முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

  சமீப காலமாக தொடர்ந்து பாஜகவையும், பிரதமர் மோடியை விமர்சனம் செய்து வந்த நடிகர் பிரகாஷ்ராஜ், நாடாளுமன்ற தேர்தலில் பெங்களூர் மத்திய தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால் தேர்தல் முடிவில் அவர் 28 ஆயிரத்து 906 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார்.

  இந்நிலையில் விரைவில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்குவேன் என்று சமீபத்தில் முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்த நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

  இதுதொடர்பாக பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:

  கடந்த ஆறு மாதங்களாக பெங்களூரு நகரம் முழுவதும் பயணம் செய்து மக்களை சந்தித்து அவர்களின் வாழ்வாதார பிரச்சனைகளுக்காக குரல் கொடுத்தேன். போலி தேசபக்தியையும், வெறுப்பையும், ஊட்டிய அரசியல் தலைவர்களை எதிர்த்தேன். ஆனால் தேர்தல் முடிவில் மக்கள் பா.ஜனதாவுக்கு வாக்களித்து அமோக வெற்றி பெறச்செய்துள்ளனர். அவர்களின் முடிவை நான் ஏற்கிறேன்.

  அதேசமயம் நான் ஏற்றுக்கொண்ட கொள்கைக்காக தொடர்ந்து போராடுவேன். பெங்களூர் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன். எனவே விரைவில் புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்க திட்டமிட்டுள்ளேன்.

  இன்னும் ஒரு வருடத்தில் நடைபெறவுள்ள பெங்களூர் மாநகராட்சி தேர்தலில் எங்களது கட்சி சார்பாக  வேட்பாளர்கள் களம் இறங்குவார்கள்.

  அதேநேரம் சினிமா எனது தொழில் என்பதால் தொடர்ந்து நடிப்பேன். கட்சி நடத்த பணம் தேவைப்படுவதால் படங்களில் நடிப்பேன்.

  இவ்வாறு அவர் தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai