எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் திடீர் சந்திப்பு 

பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவரும் காங்கிரஸ் முன்னாள்முதல்வருமான எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் திடீரென சந்தித்திருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.  

பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவரும் காங்கிரஸ் முன்னாள்முதல்வருமான எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் திடீரென சந்தித்திருப்பது அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.  

மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசில் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதால், காங்கிரஸ் எம்எல்ஏ ரமேஷ் ஜார்கிஹோளி கட்சித் தலைமைக்கு எதிராக அதிருப்தி அடைந்திருக்கிறார். அதேபோல,  கூட்டணி அரசில் அமைச்சர் பதவி கிடைக்காததால் காங்கிரஸ் எம்எல்ஏ கே.சுதாகர் அதிருப்தி அடைந்திருக்கிறார்.

மக்களவைத் தேர்தலுக்கு பிறகு மஜத-காங்கிரஸ் கூட்டணி அரசைக் கவிழ்க்க பாஜக திரைமறைவில் முயற்சி எடுத்துவரும் நிலையில்,  பெங்களூரில் சதாசிவநகரில் உள்ள இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை பாஜக மூத்தத் தலைவரும், காங்கிரஸ் முன்னாள் முதல்வருமான எஸ்.எம்.கிருஷ்ணாவை காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்கள் ரமேஷ் ஜார்கிஹோளி, கே.சுதாகர் தனித்தனியே சந்தித்துப் பேசினர். இந்த திடீர் சந்திப்பு கர்நாடக அரசியல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ரமேஷ் ஜார்கிஹோளிக்கு பின்னால் காங்கிரஸ் கட்சியின் 5 அதிருப்தி எம்எல்ஏக்கள் கே.சுதாகர்,  பி.சி.பாட்டீல், கணேஷ், ஸ்ரீமந்த் பாட்டீல், மகேஷ் குமட்டஹள்ளி ஆகியோர் உடனிருப்பதாகக் கூறப்படுகிறது. காங்கிரஸ் அதிருப்தி எம்எல்ஏக்களின் அடுத்தகட்ட நடவடிக்கைக்கு இந்த சந்திப்பு அச்சாரமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.  எஸ்.எம்.கிருஷ்ணா வீட்டில் பாஜக முன்னாள் துணைமுதல்வர் ஆர்.அசோக்கையும் கே.சுதாகர் சந்தித்துப் பேசினார்.  இதுவும் அரசியலில் உற்றுக் கவனிக்கப்படுகிறது.

இது குறித்து கே.சுதாகர் கூறுகையில் ,"எஸ்.எம்.கிருஷ்ணா எனது அரசியல் குரு, நலன்விரும்பி.  அவர் எந்தக் கட்சியில் இருந்தாலும் மாதந்தோறும் அவரை நான் சந்தித்து வந்திருக்கிறேன்.  இது தனிப்பட்ட சந்திப்பு. இதில் அரசியல் எதுவும் இல்லை." என்றார் அவர். ரமேஷ் ஜார்கிஹோளி கூறுகையில்," இது தனிப்பட்ட சந்திப்பு. எஸ்.எம்.கிருஷ்ணாவின் உடல்நலனை விசாரிக்க வந்தேன்" என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com