பத்மஸ்ரீ விருதுபெற்ற ஜெர்மனியருக்கு விசா மறுப்பு: விளக்கம் கேட்டார் சுஷ்மா

பத்மஸ்ரீ விருது பெற்ற ஜெர்மனியருக்கு விசா நீட்டிக்க மறுத்த விவகாரம் தொடர்பாக, மத்திய வெளியுறவு துறை அமைச்கம் விளக்கமளிக்க வேண்டும் என வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கோரியுள்ளார்.

ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர் பிரடெரிக் இரினா புரூனிங் (61). இவருக்கு  பசு பாதுகாப்புக்காக பத்மஸ்ரீ விருது இந்தாண்டு வழங்கப்பட்டது. பிரடெரிக் இந்தியாவில் தொடர்ந்து தங்குவதற்காக விசா  நீட்டிப்பு வழங்குமாறு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் விண்ணப்பித்திருந்தார். ஆனால், அவரது விண்ணப்பத்தை வெளியுறவு அமைச்சகம் நிராகரித்ததுடன் பத்மஸ்ரீ விருது திரும்பப் பெறப்படும் என மிரட்டியுள்ளது. இது தொடர்பான செய்தி ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை 
ஏற்படுத்தியது.
இதையடுத்து, சுஷ்மா வெளியிட்டுள்ள சுட்டுரை பதிவில், "இந்த விவகாரத்தை எனது கவனத்துக்கு கொண்டு வந்த ஊடகங்களுக்கு நன்றி. இது தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு வெளியுறவுத் துறை அமைச்சகத்திடம் கோரியுள்ளேன்' என்று தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com