அஸ்ஸாம்: மாநிலங்களவை பாஜக வேட்பாளர் காமாக்யா பிரசாத்

அஸ்ஸாமில், மாநிலங்களவைத் தேர்தலுக்கான பாஜக வேட்பாளராக காமாக்யா பிரசாத் தசா திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளார். 


அஸ்ஸாமில், மாநிலங்களவைத் தேர்தலுக்கான பாஜக வேட்பாளராக காமாக்யா பிரசாத் தசா திங்கள்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளார். 
அந்த மாநிலத்தில் பாஜகவுடன் இணைந்து, தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் நலனுக்காக செயலாற்றி வரும் காமாக்யா பிரசாத், கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஜோராத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். 
ஆனால், நடந்துமுடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக அவரை களமிறக்கவில்லை. இந்நிலையில், அவர் மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். 
அஸ்ஸாமில், மாநிலங்களவைக்கென இரு இடங்கள் உள்ள நிலையில், ஒரு இடத்துக்கான வேட்பாளரை மட்டும் பாஜக அறிவித்துள்ளது. 
மற்றொரு இடத்துக்கு, அஸ்ஸாம் மாநிலத்தில் தனது கூட்டணிக் கட்சியான அசோம் கண பரிஷத்துக்கு பாஜக ஆதரவளிக்கலாம் எனத் தெரிகிறது. 
இதனிடையே, பிகாரில் தனது கூட்டணிக் கட்சித் தலைவராக இருக்கும் ராம் விலாஸ் பாஸ்வானை, அஸ்ஸாமில் உள்ள மாநிலங்களவை இடங்களில் ஒன்றில் பாஜக நிறுத்தலாம் என்ற ஊகங்கள் நிலவுகிறது. ஏனெனில், மக்களவைத் தேர்தலில் போட்டியிடாத பாஸ்வானுக்கு மாநிலங்களவையில் இடமளிக்கப்படும் என்று தேர்தலுக்கு முந்தைய தொகுதிப் பங்கீட்டின்போது பாஜக உறுதியளித்திருந்தது. 
அஸ்ஸாமில் உள்ள இரு மாநிலங்களவை இடங்கள் காங்கிரஸ் வசம் இருந்தன. அதில் ஒரு உறுப்பினராக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இருந்தார். பாஜகவுக்கு தற்போது இருக்கும் பலம் காரணமாக அதன் வேட்பாளர்களே இந்த இரு மாநிலங்களவை இடங்களிலும் வெற்றி பெறுவார்கள் எனத் தெரிகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com