பிரதமர் மோடி பதவியேற்பு விழா: பிம்ஸ்டெக் தலைவர்களுக்கு அழைப்பு

பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக வங்காள விரிகுடா நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார
பிரதமர் மோடி பதவியேற்பு விழா: பிம்ஸ்டெக் தலைவர்களுக்கு அழைப்பு


பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக வங்காள விரிகுடா நாடுகளின் பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு கூட்டமைப்பின் (பிம்ஸ்டெக்) தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இக்கூட்டமைப்பில் வங்கதேசம், மியான்மர், இலங்கை, தாய்லாந்து, நேபாளம், பூடான் ஆகிய நாடுகள் உள்ளன. இது தவிர ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தலைவராக இப்போதுள்ள கிர்கிஸ்தான், மோரீஷஸ் ஆகிய நாடுகளின் தலைவர்களுக்கு பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எனினும், மோடியின் பதவியேற்பு விழாவில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா பங்கேற்க மாட்டார் என்று தெரிகிறது. ஏனெனில், 30-ஆம் தேதி  அவர் 3 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்ள இருக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்த், நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவருமான கமல் ஹாசன் ஆகியோருக்கு பதவியேற்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படும் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
பாஜக ஆளும் மாநில முதல்வர்கள், கட்சியின் மூத்த தலைவர்கள் தவிர தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ், ஆந்திர முதல்வராக பதவியேற்க இருக்கும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி உள்ளிட்டோரும் மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பார்கள் என்று தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com