ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்வோரைக் கைது செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளதா?: உச்சநீதிமன்றம் விசாரணை

ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்வோரைக் கைது செய்வதற்கு அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளதா என்பதை பரிசீலிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்வோரைக் கைது செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளதா?: உச்சநீதிமன்றம் விசாரணை


ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு செய்வோரைக் கைது செய்வதற்கு அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளதா என்பதை பரிசீலிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
வரி ஏய்ப்பு செய்வோரை ஜிஎஸ்டி வரிச் சட்டத்தின் கீழ் கைது செய்யலாம். இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்கள், உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி அனிருத்தா போஸ் ஆகியோரைக் கொண்ட விடுமுறைகால அமர்வு முன் புதன்கிழமை 
பரிசீலனைக்கு வந்தது. அப்போது, மனுவை விசாரிக்க ஒப்புக் கொண்ட நீதிபதிகள், இது தொடர்பாக மேலும் கூறியதாவது:
வரி ஏய்ப்பு செய்யும் தனி நபர்களுக்கு முன்ஜாமீன் வழங்குவதில் ஒவ்வொரு உயர்நீதிமன்றமும், ஒவ்வொரு நிலைப்பாட்டை எடுக்கிறது. எனவே, வரி ஏய்ப்பு செய்வோரைக் கைது செய்வதற்கான அதிகாரத்தை முடிவு செய்ய வேண்டியுள்ளது.
அண்மையில், தெலங்கானாவில் சில தனியார் நிறுவனங்கள் தொடுத்த வழக்கை விசாரித்த அந்த மாநில உயர்நீதிமன்றம், வரி ஏய்ப்பு செய்தவர்களைக் கைது செய்வதில் இருந்து விலக்கு  அளிக்க முடியாது என்று கூறிவிட்டது. அந்த தீர்ப்பை உச்சநீதிமன்றமும் உறுதி செய்துள்ளது.  எனவே, அனைத்து உயர்நீதிமன்றங்களும் ஜிஎஸ்டி வரி ஏய்ப்பு தொடர்பான வழக்குகளில் முன்ஜாமீன் வழங்கும்போது, உச்சநீதிமன்றம் அண்மையில் அளித்த தீர்ப்பை கவனத்தில் கொள்ள வேண்டும்.
மேலும், வரி ஏய்ப்பு செய்வோருக்கு அதிகாரம் உள்ளதா என்பதை பரிசீலிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுக்களுக்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும். இந்த மனுக்களை, 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com