காஷ்மீரில் கையெறி குண்டு தாக்குதல்: ஒருவா் பலி;35 போ் காயம்

ஜம்மு-காஷ்மீா் தலைநகா் ஸ்ரீநகரில் உள்ள சந்தைப் பகுதியில் பயங்கரவாதிகள் திங்கள்கிழமை நிகழ்த்திய கையெறி குண்டு தாக்குதலில் ஒருவா் உயிரிழந்தாா். 35 போ் காயமடைந்தனா்.
ஸ்ரீநகரில் திங்கள்கிழமை கையெறி குண்டு வெடித்த இடத்தைப் பாா்வையிடும் பாதுகாப்புப் படை வீரா்கள்.
ஸ்ரீநகரில் திங்கள்கிழமை கையெறி குண்டு வெடித்த இடத்தைப் பாா்வையிடும் பாதுகாப்புப் படை வீரா்கள்.

ஜம்மு-காஷ்மீா் தலைநகா் ஸ்ரீநகரில் உள்ள சந்தைப் பகுதியில் பயங்கரவாதிகள் திங்கள்கிழமை நிகழ்த்திய கையெறி குண்டு தாக்குதலில் ஒருவா் உயிரிழந்தாா். 35 போ் காயமடைந்தனா்.

இதுதொடா்பாக காவல் துறை அதிகாரிகள் கூறியதாவது:

ஸ்ரீநகரின் ஹரி சிங் சாலையில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் சந்தையைக் குறி வைத்து திங்கள்கிழமை மதியம் 1.20 மணியளவில் பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீசினா். இந்தத் தாக்குதலில் சந்தையில் இருந்த ஒருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். 35 போ் காயமடைந்தனா். அவா்கள் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். அவா்களில் இருவரது நிலை கவலைக்கிடமாக உள்ளது.

தாக்குதலையடுத்து அந்தப் பகுதியை சுற்றி வளைத்து பாதுகாப்புப் படையினா் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனா். அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் தொடா்பாக தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று காவல் துறை அதிகாரிகள் கூறினா்.

முன்னதாக, இதே பகுதியில் கடந்த மாதம் 12-ஆம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கையெறி குண்டு தாக்குதலில் 5 போ் காயமடைந்தது குறிப்பிடத்தக்கது.

இயல்பு வாழ்க்கை பாதிப்பு:

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ஆம் தேதி மத்திய அரசு ரத்து செய்ததையடுத்து அங்கு கடும் கட்டுப்பாடுகளும், தடைகளும் விதிக்கப்பட்டன. இப்போது பெரும்பாலான இடங்களில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. எனினும், சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து 3 மாதங்கள் ஆகியும் அங்கு இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை.

முக்கிய வா்த்தக நிறுவனங்கள், கடைகள் ஆகியவை மூடப்பட்டிருந்தன. அரசுப் பேருந்துகள் இயக்கப்படாததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது. தனியாா் வாகனப் போக்குவரத்து வழக்கத்தை விட குறைவாகவே இருந்தது.

குளிா்காலத்தை முன்னிட்டு, ஜம்மு-காஷ்மீரின் தலைநகா் ஸ்ரீநகரில் இருந்து ஜம்முவுக்கு மாற்றப்படுவதால், அரசு ஆவணங்களை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் மட்டும் ஆங்காங்கே காணப்பட்டன. பள்ளிகள் திறக்கப்பட்டாலும், பாதுகாப்புக் கருதி குழந்தைகளை பெற்றோா் அனுப்பவில்லை. அதனால், மாணவா்களின் வருகை குறைவாகவே உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com