மகாராஷ்டிரத்தில் முதல்வரைத் தீர்மானிக்கிறதா ஆர்எஸ்எஸ்? மோகன் பாகவத்துடன் ஃபட்னாவீஸ் சந்திப்பு!

மகாராஷ்டிரத்தில் அரசு அமைப்பதில் இழுபறி நீடித்து வரும் நிலையில் அம்மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவீஸ் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தைச் சந்திக்கிறார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


மகாராஷ்டிரத்தில் அரசு அமைப்பதில் இழுபறி நீடித்து வரும் நிலையில் அம்மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னாவீஸ் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தைச் சந்திக்கிறார்.

மகாராஷ்டிரத்தில் 'சுழற்சி முறையில் முதல்வர் பதவி' என்பதில் பாஜக மற்றும் சிவசேனை இடையே பிரச்னை தொடர்ந்து நீடித்து வருகிறது. இதனால், அம்மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக, சிவசேனை கூட்டணி வெற்றி பெற்றபோதிலும் இன்னும் அரசு அமைக்க முடியாத சூழல் நிலவி வருகிறது.

இந்த அரசியல் குழப்பம் காரணமாக, அங்கு பல்வேறு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இதனிடையே, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் ஆதரவுடன் சிவசேனை ஆட்சி அமைக்கலாம் என்றும் தகவல்கள் வெளிவந்துக்கொண்டிருக்கிறது.

இந்தச் சூழலில் சிவசேனை தலைவர்கள் இரண்டு முறை ஆளுநரைச் சந்தித்தனர். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் நேற்று (திங்கள்கிழமை) காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியைச் சந்தித்து ஆலோசனை நடத்தினார். மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவீஸ் பாஜக தேசியத் தலைவரும் மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷாவைச் சந்தித்தார். இந்தப்  பேச்சுவார்த்தைகளும், ஆலோசனைகளும் நடைபெற்று 24 மணி நேரமாகியும் அங்கு இன்னும் முடிவுகள் எட்டப்படவில்லை.

பாஜகவுடன் பேச்சுவார்த்தை என்றால், அது முதல்வர் பதவியைக் குறித்து மட்டுமே இருக்க முடியும் என்பதை சிவசேனை அழுத்தமாகக் கூறிவிட்டது.

இந்நிலையில், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவீஸ் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத்தைச் சந்திக்கிறார். மோகன் பாகவத்தைச் சந்திக்க நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்கு ஃபட்னாவீஸ் தற்போது வருகை தந்துள்ளார்.

மகாராஷ்டிர சட்டப்பேரவையின் ஆயுள்காலம் நிறைவடைய இன்னும் 3 நாட்களே மீதமுள்ள நிலையில், அதற்குள் தீர்வு எட்டப்படுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com