பஞ்சாப்-மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் பணமெடுப்பதற்கான உச்சவரம்பு உயர்வு: ஆர்பிஐ 

முறைகேடுப் புகாரில் சிக்கியிருக்கும் பஞ்சாப்-மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் நலன் கருதி, பணமெடுப்பதற்கான உச்சவரம்பை ரூ.50 ஆயிரமாக உயர்த்தி ஆர்பிஐ நடவடிக்கை எடுத்துள்ளது.
பிஎம்சி வங்கி
பிஎம்சி வங்கி

முறைகேடுப் புகாரில் சிக்கியிருக்கும் பஞ்சாப்-மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின் நலன் கருதி, பணமெடுப்பதற்கான உச்சவரம்பை ரூ.50 ஆயிரமாக உயர்த்தி ஆர்பிஐ நடவடிக்கை எடுத்துள்ளது.

பஞ்சாப்-மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கியின் நிர்வாகத்தை ஆர்பிஐ தனது நேரடிக் கட்டுப்பாட்டில் எடுத்த பிறகு, வங்கிக் கணக்கில் இருந்து வாடிக்கையாளர்கள் நாள் ஒன்றுக்கு பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு 5வதுமுறையாக இன்று உயர்த்தப்பட்டுள்ளது. முன்னதாக இது ரூ.40 ஆயிரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு 137 கிளைகளுடன் "பஞ்சாப்-மகாராஷ்டிர கூட்டுறவு வங்கி' இயங்கி வருகிறது. இந்த வங்கியின் பணப்பரிவர்த்தனைகளில் முறைகேடு நடைபெற்றிருப்பது, ரிசர்வ் வங்கி ஆய்வின்போது தெரிய வந்தது.

இதையடுத்து, வங்கியின் செயல்பாடுகளுக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இந்த முறைகேடு தொடர்பாக, மும்பை காவல்துறையின் பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கியின் முன்னாள் தலைவர் வர்யம் சிங், முன்னாள் நிர்வாக இயக்குநர் ஜாய் தாமஸ் உள்ளிட்ட உயரதிகாரிகள், வீட்டுவசதி மேம்பாடு மற்றும் உள்கட்டமைப்பு லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநர் ராகேஷ் வதாவன், அவரது மகன் சாரங் ஆகியோருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல்துறையின் முதல்கட்ட விசாரணையில், கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் ரூ. 4,355 கோடி அளவுக்கு வங்கிக்கு நஷ்டம் ஏற்பட்டது தெரியவந்துள்ளது.  முன்னதாக, முன்னாள் நிர்வாக இயக்குநர் ஜாய் தாமஸ் கைது செய்யப்பட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com