அறிவியல் ஆராய்ச்சி என்பது நூடுல்ஸ், பீட்ஸா போல இல்லை: பிரதமர் மோடி 

2 நிமிடத்தில் நூடுல்ஸ், அரை மணி நேரத்தில் பீட்ஸா கிடைப்பது போல அறிவியல் ஆராய்ச்சி கிடைக்காது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
அறிவியல் ஆராய்ச்சி
அறிவியல் ஆராய்ச்சி


2 நிமிடத்தில் நூடுல்ஸ், அரை மணி நேரத்தில் பீட்ஸா கிடைப்பது போல அறிவியல் ஆராய்ச்சி கிடைக்காது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.

5வது இந்திய சர்வதேச அறிவியல் திருவிழா மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள பிஸ்வா அரங்கில் நடைபெற்றது.  இவ்விழாவில் விடியோ கான்ஃபரன்சிங் மூலம் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் இல்லாமல் எந்த நாடும் முன்னேறியது இல்லை. இந்தியாவில் பல விஞ்ஞானிகள் உருவாகியுள்ளனர். இதனால் நாட்டுக்கு பெருமை கிடைத்துள்ளது. அறிவியல் தொழில்நுட்பத்தில் இந்தியாவைப்போல் எந்த நாடும் வளர்ச்சி அடையவில்லை. 

அதே சமயம், நூடுல்ஸ், பீட்ஸா போல் இல்லாமல் அறிவியல் ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்க நேரம் அதிகம் ஆகும்.  கண்டுபிடிப்புகளுக்கும், ஆராய்ச்சிக்கும் மத்திய அரசு முழு ஆதரவு அளித்து வருகிறது. சந்திராயன் 2 குறித்து சிறியவர் முதல் பெரியவர் வரை பேசினார்கள் என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் பூடான், மாலத்தீவு மியான்மர் நாடுகள் சேர்ந்த அமைச்சர்கள், அறிஞர்கள் பங்கேற்றுள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com