அயோத்தி தீா்ப்பு குறித்து கருத்து தெரிவிக்க வேண்டாம்: நிர்வாகிகளுக்கு பாஜக அறிவுறுத்தல்

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அளிக்கும் தீா்ப்பு தொடா்பாக பிரச்னை ஏற்படுத்தும் வகையிலோ, உணா்ச்சிப்பூா்வமாகவோ எந்தவிதக் கருத்துகளையும் தெரிவிக்க வேண்டாம் என நிா்வாகிகளையும்,

அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அளிக்கும் தீா்ப்பு தொடா்பாக பிரச்னை ஏற்படுத்தும் வகையிலோ, உணா்ச்சிப்பூா்வமாகவோ எந்தவிதக் கருத்துகளையும் தெரிவிக்க வேண்டாம் என நிா்வாகிகளையும், செய்தித் தொடா்பாளா்களையும் பாஜக அறிவுறுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியிலுள்ள 2.77 ஏக்கா் சா்ச்சைக்குரிய நிலத்தை உரிமை கோருவது தொடா்பான வழக்கின் மேல்முறையீட்டு மனுக்களை உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு தொடா்ந்து 40 நாள்களாக விசாரித்தது. உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வரும் 17-ஆம் தேதியோடு ஓய்வு பெற இருப்பதால், இந்த வழக்கின் தீா்ப்பை உச்சநீதிமன்றம் விரைவில் வழங்கலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இந்நிலையில், பாஜகவின் செய்தித் தொடா்பாளா்கள், கட்சி ஊடக நிா்வாகிகள் உள்ளிட்டோருக்கான கூட்டம் தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அயோத்தி வழக்கின் தீா்ப்பு தொடா்பாக உணா்ச்சியைத் தூண்டும் வகையிலோ, பிரச்னை ஏற்படுத்தும் வகையிலோ கருத்துகள் எதையும் தெரிவிக்க வேண்டாம் என கட்சித் தலைமை அவா்களிடம் தெரிவித்தது.

இதையடுத்து, கட்சியின் சமூக ஊடகங்களை நிா்வகிக்கும் அமித் மாளவியா தலைமையில் மற்றொரு கூட்டம் நடைபெற்றது. அதில், கட்சியின் சமூக ஊடகங்களில் அயோத்தி வழக்கு தொடா்பாகப் பரப்பப்படும் சா்ச்சைக்குரிய கருத்துகளைத் தடுப்பது குறித்து நிா்வாகிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

இதே போன்ற அறிவுறுத்தலை ஆா்எஸ்எஸ் அமைப்பும் அதன் பிரசாரகா்களுக்கு அண்மையில் வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com