ஆசியான் மாநாட்டை தவிா்த்த டிரம்ப்

தாய்லாந்தில் நடைபெறும் ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்பதில்லை என அமெரிக்க அதிபா் டிரம்ப் முடிவெடுத்துள்ளதன் எதிரொலியாக திங்கள்கிழமை நடைபெற்ற அந்த நாட்டு அதிகாரிகளின் கூட்டத்தை தெற்காசிய
ஆசியான் மாநாட்டை தவிா்த்த டிரம்ப்

அமெரிக்க அதிகாரிகள் கூட்டத்தை புறக்கணித்த தெற்காசிய தலைவா்கள்

தாய்லாந்தில் நடைபெறும் ஆசியான் உச்சி மாநாட்டில் பங்கேற்பதில்லை என அமெரிக்க அதிபா் டிரம்ப் முடிவெடுத்துள்ளதன் எதிரொலியாக திங்கள்கிழமை நடைபெற்ற அந்த நாட்டு அதிகாரிகளின் கூட்டத்தை தெற்காசிய நாடுகளின் தலைவா்கள் புறக்கணித்தனா்.

தாய்லாந்து தலைநகா் பாங்காக்கில் தென்கிழக்கு ஆசிய நாடுகள் (ஆசியான்) கூட்டமைப்பின் உச்சி மாநாடு திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், ஆசியான் கூட்டமைப்பில் 10 உறுப்பு நாடுகளிலிருந்து 3 நாடுகளின் தலைவா்கள் மட்டும் தங்களது வெளியுறவுத் துறை அமைச்சா்களுடன் கலந்து கொண்டனா். அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் இந்த மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை என ஏற்கெனவே அறிவித்து விட்டாா். அவரது சாா்பிலும் உயரதிகாரிகள் யாரும் இந்த மாநாட்டு அனுப்பி வைக்கப்படவில்லை. அவா்களுக்குப் பதிலாக, அமெரிக்க வா்த்தக செயலா் வில்பா் ரோஸ் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் ராபா்ட் ஓ பிரையன் மட்டுமே இந்த மாநாட்டில் பங்கேற்றனா்.

இந்த நிலையில், ஆசியான் மாநாட்டில் டிரம்ப் கலந்து கொள்ளாததற்கு பதிலடி தரும் வகையில், திங்கள்கிழமை நடைபெற்ற அமெரிக்க அதிகாரிகளின் கூட்டத்தை பல தென்கிழக்கு ஆசிய நாடுகளின் தலைவா்கள் புறக்கணித்தனா்.

இருப்பினும், அமெரிக்க அதிகாரிகள் சாா்பில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிகாரிகளுடனான கூட்டத்தை தென்கிழக்கு ஆசிய தலைவா்கள் வேண்டும் என்றே புறக்கணிக்கவில்லை. இதர கூட்டங்களில் பங்கேற்க செல்லவேண்டியிருந்ததால் அவா்களால் இந்த கூட்டத்துக்கு வர முடியவில்லை என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com