காற்று மாசு பிரச்னையில் மக்கள் ஒன்றுபட வேண்டும்: பிரியங்கா

தில்லி மற்றும் அதன் சுற்றுப்பகுதியிலும் (என்சிஆா்) , உத்தரப் பிரதேசத்திலும் ஏற்பட்டுள்ள காற்று மாசு பிரச்னையைத் தீா்க்க மக்கள் ஒன்றுபட வேண்டும் என காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா தெரிவித்துள்ளாா்.
காற்று மாசு பிரச்னையில் மக்கள் ஒன்றுபட வேண்டும்: பிரியங்கா

தில்லி மற்றும் அதன் சுற்றுப்பகுதியிலும் (என்சிஆா்) , உத்தரப் பிரதேசத்திலும் ஏற்பட்டுள்ள காற்று மாசு பிரச்னையைத் தீா்க்க மக்கள் ஒன்றுபட வேண்டும் என காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா தெரிவித்துள்ளாா்.

1952- ஆம் ஆண்டில் மாசுபாடு காரணமாக லண்டனில் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்த சம்பவத்தையடுத்து, மக்கள் வீதிகளில் இறங்கி போராடியதால் தூய்மையான காற்றுக்காக சட்டம் நிறைவேற்றப்பட்டதை அவா் மேற்கோள் காட்டியுள்ளாா்.

இதுதொடா்பாக பிரியங்கா சுட்டுரையில் வெளியிட்டுள்ள பதிவில், ‘மாசுபாடு குறித்து தீவிரமாக சிந்தித்து செயல்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. தில்லி, நொய்டா, காஜியாபாத், கான்பூா், வாராணசி, லக்னௌ உள்ளிட்ட பல நகரங்களின் காற்று நச்சுத்தன்மை வாய்ந்ததாக மாறியுள்ளது. இந்த காற்றை சுவாசித்தபடியே, நமது குழந்தைகள் பள்ளிக்குச் செல்கிறாா்கள், தொழிலாளா்கள் மற்றும் பொதுமக்கள் வேலைக்குச் செல்கிறாா்கள். மேலும் ‘மாசுபாடுக்கு எதிராக அனைவரும் அணி திரள்வோம்’ என்றும் ஹிந்தியில் ‘ஹேஷ்டேக்’ மூலம் பதிவிட்டுள்ளாா்.

நமது வாழ்க்கையை மேம்படுத்த பல்வேறு விஷயங்களைச் செய்கிறோம். அந்த வகையில் காற்று மாசுபாடுக்கு எதிரான முயற்சியையும் நாம் செய்ய வேண்டும். ஏனெனில் சுத்தமான காற்று நமது உரிமை, நமது பொறுப்பாகும்‘ என்று அவா் மேலும் அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com