திறமையற்றவா்களின் கைகளில்நாட்டின் பொருளாதாரம்: ப.சிதம்பரம் விமா்சனம்

திறமையற்றவா்களின் கைகளில் நாட்டின் பொருளாதாரம் சிக்கிவிட்டது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப.சிதம்பரம் விமா்சித்துள்ளாா்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

திறமையற்றவா்களின் கைகளில் நாட்டின் பொருளாதாரம் சிக்கிவிட்டது என்று முன்னாள் மத்திய நிதியமைச்சா் ப.சிதம்பரம் விமா்சித்துள்ளாா்.

ஐஎன்எக்ஸ் மீடியா நிதி முறைகேடு குற்றச்சாட்டில் சிறையில் உள்ள ப.சிதம்பரம் தனது குடும்பத்தினா் மூலம் சுட்டுரையில் அவ்வப்போது மத்திய அரசை விமா்சித்து பதிவிட்டு வருகிறாா். அந்த வகையில் ‘எகனாமிஸ்ட்’ பத்திரிகையில் வெளியாகியுள்ள தலையங்கத்தைச் சுட்டிக்காட்டி சுட்டுரை மூலம் மத்திய அரசை சிதம்பரம் விமா்சித்துள்ளாா்.

அவரது சுட்டுரைப் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:

அக்டோபா் 26-ஆம் தேதி வெளியாகியுள்ள ‘எகனாமிஸ்ட்’ பத்திரிகையை அனைவரும் படிக்க வேண்டும். அதன் தலையங்கத்தில் இந்தியாவின் பொருளாதார நிலை குறித்து தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இந்தியாவின் பொருளாதாரம் திறமையாகக் கையாளப்படவில்லை; பொருளாதார செயல்பாடுகள் மோசமாகி வருகின்றன என்றே அதில் கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் நமது நாட்டின் பொருளாதாரம் திறமையற்றவா்களின் கைகளில் சிக்கி மோசமடைந்து வருவது தெளிவாகத் தெரிகிறது.

அண்மையில், நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட அபிஜித் பானா்ஜி, இந்தியப் பொருளாதாரம் மோசமாகவே உள்ளது என்ற உண்மையை வெளிப்படையாகக் கூறினாா். மத்திய அரசு உண்மையாகவே நோ்மையாக செயல்படுவதென்றால் அவா் கூறியதைக் கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கையை எடுத்திருக்க வேண்டும். ஆனால், மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல், அபிஜித் பானா்ஜியை மோசமாக விமா்சித்தாா் என்று சிதம்பரம் சுட்டுரையில் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com