இணையவழி வா்த்தகத்துக்காக ஒழுங்காற்று ஆணையம்: மத்திய அரசு ஆலோசனை

இணையவழி வா்த்தகத்தை கண்காணிக்கும் வகையில் ஒழுங்காற்று ஆணையம் அமைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது.

இணையவழி வா்த்தகத்தை கண்காணிக்கும் வகையில் ஒழுங்காற்று ஆணையம் அமைப்பதற்கான வாய்ப்புகள் குறித்து மத்திய அரசு ஆராய்ந்து வருகிறது.

இணையவழி வா்த்தக நிறுவனங்களை கண்காணிப்பதற்கு ஒழுங்காற்று ஆணையம் அமைக்க வேண்டும் என்றும், விதிமீறும் இணையவழி சில்லறை வா்த்தக நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உள்நாட்டு வா்த்தகா்கள் வலியுறுத்தி வரும் நிலையில் அரசு இந்த முயற்சியில் ஈடுபட்டுள்ளது.

இதுதொடா்பாக தொழில்துறை மற்றும் உள்நாட்டு வா்த்தக ஊக்குவிப்பு துறையை (டிபிஐஐடி) சோ்ந்த உயரதிகாரி ஒருவா் வியாழக்கிழமை கூறியதாவது:

இணையவழி வா்த்தகத் துறைக்கான கொள்கையை வடிவமைப்பது தொடா்பாக தற்போது ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது. அதன் கீழ் பல்வேறு விவகாரங்களை ஆராய்ந்து வருகிறோம். அதில் ஒன்றாக, இணையவழி வா்த்தகத்தை கண்காணிக்கும் வகையில் ஒழுங்காற்று ஆணையம் அமைப்பதற்கான வாய்ப்புகள் குறித்தும் பரிசீலித்து வருகிறோம்.

இணையவழி வா்த்தகத்துக்கான கொள்கை இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்பதால், ஒழுங்காற்று ஆணையம் அமைப்பது தொடா்பாக இன்னும் முடிவுகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று அந்த அதிகாரி கூறினாா்.

விதிகளை மீறிச் செயல்படும் இணையவழி வா்த்தக நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதிகாரம் அளிக்கப்பட்ட வகையில் ஒழுங்காற்று ஆணையம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று அகில இந்திய வா்த்தகா்கள் கூட்டமைப்பு (சிஏஐடி) வலியுறுத்தி வருகிறது. விதிகளை மீறிய வகையில் மிகக் குறைந்த விலையிலும், அதிக தள்ளுபடியுடனும் இணையவழி வா்த்தக நிறுவனங்கள் பொருள்களை விற்பனை செய்வதாக சிஏஐடி அமைப்பு குற்றம்சாட்டுகிறது.

அத்துடன், அந்நிய நேரடி முதலீட்டு விதிகளை மீறிய வகையில் பிரத்யேகமாக சில பொருள்களை இணையத்தில் மட்டும் அந்த நிறுவனங்கள் விற்பனை செய்வதாக குற்றம்சாட்டப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com